சென்னை எழிலகத்தில், மேம்பட்ட வழித்தடங்கள் உருவாக்கல், நகர்ப்புற வழித்தடம்-பயன்பாடு, இணைய தடம் மீதான கருத்தாய்வு மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் துணைத் தலைவர் சி. பொன்னையன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் துணைத் தலைவர் சி. பொன்னையன் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "பொதுப் போக்குவரத்து காலத்திற்கு ஏற்ப குறைந்த கட்டணத்தில் வசதி உடையதாகவும், எல்லா மக்களும் தெரிவு செய்யக்கூடியதாகவும் இருக்க வேண்டும். புதிதாக வரவிருக்கும் மாநில நகர்ப்புற போக்குவரத்துக் கொள்கை நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம், பொதுப் போக்குவரத்து விரிவாக்கத்திற்கு அடிகோலிடும்.
மகிழுந்துகளுக்கான பல்லடுக்கு வாகன நிறுத்தம் மற்றும் அதன் மேலாண்மை, நகர்ப்புற இடப் பயன்பாட்டின் மேலாண்மை, வாகனங்களைத் தெருக்களிலும் மற்றும் கிடைத்த இடத்திலும் நிறுத்திவைப்பதை, தவிர்ப்பதற்குச் சிறந்த வழி ஆகும். மின் பேருந்துகளை அறிமுகம் செய்வதன் மூலம் மாசு, காலநிலை மாற்றம் தவிர்த்தல், குடிமக்களின் உடல்நலக்கேடு ஆகியவற்றில் நன்மை பயக்கும்.
தமிழ்நாட்டின் பெருநகரமான சென்னை, மதுரை, திருச்சி, கோவையில் – வானளாவிய வழித்தடங்கள் (Skyway Corridor) அறிமுகம் செய்வதன் மூலம் வேகமான, பாதுகாப்பான போக்குவரத்து, குறைந்த பயண நேரம், குறைவான எரிபொருள் பயன்பாடு மற்றும் வாகன நெரிசல் போன்ற நன்மைகளுக்கு வழிவகுக்கும். மேலும், விபத்துகளை வானளாவிய வழித்தடங்கள் குறைக்கும்" என்றார்.
இதையும் படிங்க: நிவர் புயல் சேத விவரங்கள் வெளியீடு