ETV Bharat / state

அரசுக் கலைக் கல்லூரிகளில் வரும் கல்வியாண்டு முதல் புதிய ஷிப்ட் முறை அறிமுகம்!

author img

By

Published : Feb 28, 2020, 10:42 AM IST

சென்னை: அரசுக் கலை மற்றும் அறிவியியல் கல்லூரிகளில் இரு ஷிப்ட் முறையில் வரும் கல்வியாண்டு முதல் மாற்றம் கொண்டுவர கல்லூரிக் கல்வி இயக்குநரகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Introducing a new shift system from the academic year of the government Arts and science colleges

தமிழ்நாட்டிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியியல் கல்லூரிகளில் அதிகளவில் சேர்ந்துள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப காலை, மாலை என இரு பிரிவுகளில் பாடம் நடத்தப்பட்டுவருகிறது. இதனால் மாணவர்களுக்கு கல்வி கற்பதற்கு போதுமான நேரம் இல்லாமல் இருப்பதாகக் கருதப்படுகிறது. எனவே வரும் கல்வியாண்டு முதல் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வகுப்புகள் நடத்தப்படவுள்ளன.

தமிழ்நாட்டில் மொத்தம் 114 அரசுக் கல்லூரிகள் செயல்பட்டுவருகின்றன. இதில் 65க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் காலை, மாலை என்று இரு பணி நேர முறை (ஷிப்ட்) பின்பற்றப்பட்டு வருகின்றது. இதில் காலை வகுப்புகள் காலை 8:45மணிக்குத் தொடங்கி பிற்பகல் 1:15 மணிக்கு முடிவடைகிறது. மாலை வகுப்புகள் மதியம் 1:30 மணி முதல் 6.00 மணி வரை நடைபெறுகிறது.

காலை நேர வகுப்புகளில் நிரந்தர விரிவுரையாளர்கள் பேராசிரியர்களும், மாலை நேர வகுப்பில் 1,661 கௌரவ விரிவுரையாளர்களும் தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிந்துவருகின்றனர். இந்த நிலையில் இருமுறை என்பதை மாற்றிவிட்டு காலை மட்டுமே பணி நேரம் என்கின்ற முறையினை அரசுக் கல்லூரிகளில் அறிமுகப்படுத்த உயர்க்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

அறிக்கை

இந்த முறையைச் செயல்படுத்தும்போது மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக தேவைப்படும் வகுப்பறைகளின் விவரங்களை அளிக்க வேண்டும் என அரசு கலை மற்றும் அறிவியியல் கல்லூரிகளின் முதல்வர்களிடம் கேட்கப்பட்டுள்ளது. காலை நேர வகுப்புகளை ஒப்பிடுகையில் மாலையில் குறைந்த அளவிலான மாணவர்கள் மட்டுமே பயின்று வருவதே இதற்குக் காரணம்.

மேலும் காலையில் மட்டுமே பணி நேரம் என்கிற முறையினைக் கொண்டுவரும் வேளையில் மாணவர் எண்ணிக்கை அதிகமிருக்கும் கல்லூரிகளில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்பறைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் . புதிய பணி நேரத்தில் வரும் கல்வியாண்டு முதல் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வகுப்புகள் நடத்தப்படவுள்ளன.

இதையும் படிங்க: குடியாத்தம் திமுக எம்எல்ஏ காலமானார்!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.