ETV Bharat / state

போதையில் பெண் தோழி: ரூ.40 லட்சத்தை அபேஸ் செய்த ஆண் தோழர்கள்; டிராக் செய்துபிடித்த போலீஸ் - போதையில் பெண் தோழி

பெண் தோழிக்கு அளவுக்கு அதிகமாக மது அருந்த வைத்து, அவரது வீட்டிலிருந்து ரூ.40 லட்சம் திருடிய இரண்டு ஐடி ஊழியர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

a
a
author img

By

Published : Nov 10, 2021, 8:22 PM IST

சென்னை கானாத்தூர் ரெட்டிக்குப்பம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர், பதர் ஜஹான் (45). இவர் தனியார் தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு விளம்பரதாரராகப் பணியாற்றி வருகின்றார். இவருக்கு ஒரு மகள் உள்ளார்.

பதர் ஜஹானின் கணவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததால், அவரது சொத்துகளை விற்று மகளை லண்டனில் படிக்க வைத்து வருகிறார்.

இந்நிலையில் பதர் ஜஹானின் கார் ஓட்டுநரின் நண்பர்களான ஐ.டி. கம்பெனி ஊழியர்கள் பிரபாகரன் (24), ஐசக் டேனியல் (23) ஆகியோருடன் பதர் ஜஹானுக்கு பழக்கம் ஏற்பட்டது.

ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்ட நண்பரின் செல்போன்கள்

நாளடைவில் இவர்கள் இருவரும் பதர் ஜஹானின் வீட்டிற்கு வந்து மது அருந்தி விட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். அதே போல் சம்பவ தினமான நவம்பர் 6ஆம் தேதி இருவரும் பதர் ஜஹானின் வீட்டிற்கு வந்து, பதர் ஜஹானுடன் இணைந்து மது அருந்தி விட்டுச் சென்றனர்.

பின்னர் மறுநாள் காலை (நவம்பர் 7) பதர் ஜஹான் தனது பீரோவைத் திறந்து பார்த்தபோது, அதில் உள்ளிருந்த 40 லட்சம் ரூபாய் பணம் திருடு போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, பதர் ஜஹான் பிரபாகரன், ஐசக் டேனியல் இருவரின் மொபைல் போனிலும் தொடர்புகொண்டார். ஆனால், இருவரின் மொபைல் எண்களும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தன.

கைதானவர்

இதனையடுத்து உடனடியாக பதர் ஜஹான், கானாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் பணத்தைத் திருடிச் சென்ற நபர்களின் செல்போன் எண்ணை வைத்து டிராக் செய்தனர். அதில் அவர்கள் இருவரும் புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து காவல் துறையினர் அங்கு சென்று இருவரையும் கைது செய்து அறையிலிருந்த ரூ.27 லட்சத்தைப் பறிமுதல் செய்து, சென்னை அழைத்து வந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (24), ஊத்துக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஐசக் டேனியல் (23). இவர்கள் இருவரும் காரப்பாக்கத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றாக வசித்துக்கொண்டு, ஒரே தனியார் ஐ.டி. கம்பெனியில் பணியாற்றி வருகின்றனர்.

சிக்கிய இருவர்

தனது நண்பர் முலமாக பதர் ஜஹான் அறிமுகமானார். கடந்த இரண்டு மாதமாக பழக்கம் ஏற்பட்டு அடிக்கடி பதர் வீட்டிற்கு சென்று ஒன்றாக மது அருந்திவிட்டு, அவருடன் திருமணத்தைத் தாண்டிய உறவில் இருந்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

v
கைதானவர்

அப்போது பதர் தனது கணவரின் சொத்துகளை விற்று வீட்டில் 40 லட்ச ரூபாய் வைத்திருந்தது இருவருக்கும் தெரியவந்தது. இப்பணத்தை மொத்தமாக எடுக்காமல் ரூ.3 லட்சம், ரூ.10 லட்சம் என இரண்டு தவணைகளாகத் திருடியுள்ளனர்.

பின் மீதி இருந்த பணத்தை மொத்தமாக திருடத் திட்டமிட்டு சம்பவ தினமான நவம்பர் 6ஆம் தேதி பதர் வீட்டிற்து வந்து ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது பதருக்கு அதிக அளவில் மது ஊற்றிக்கொடுத்து, அவரை போதையில் படுக்கவைத்து பீரோவிலிருந்த பணத்தை எடுத்துச்சென்று சொகுசு வாழ்க்கை வாழ முயற்சி செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட இருவரையும் கானாத்தூர் காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: திருமணத்தை மீறிய உறவால் கணவரை கொன்ற பெண்: குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.