ETV Bharat / state

ஆறுகள் இணைப்பால் தமிழ்நாட்டிற்குப் பயனில்லை - நீர்ப்பாசன வல்லுநர் - தமிழ்நாட்டிற்கு நதிகள் இணைப்பு பயனுடையதாக இருக்காது என நீர்ப்பாசன வல்லுநர் வீரப்பன் கூறிவுள்ளார்

தமிழ்நாட்டிற்கு ஆறுகள் இணைப்பு பயனுடையதாக இருக்காது என நீர்ப்பாசன வல்லுநர் வீரப்பன் அளித்த பேட்டியைத் தொகுப்பாகக் காணலாம்.

தமிழ்நாட்டிற்கு நதிகள் இணைப்பு பயனுடையதாக இருக்காது

author img

By

Published : Feb 11, 2022, 6:09 PM IST

சென்னை: தமிழ்நாட்டிற்கு ஆறுகள் இணைப்பு பயனுடையதாக இருக்காது எனவும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் தூர்வாரி நல்ல முறையில் பராமரிப்பு முறையை மேற்கொண்டாலே தமிழ்நாட்டிற்குப் போதுமான நீர் கிடைக்கும் என்றும் முன்னாள் சிறப்புத் தலைமைப் பொறியாளர் அ. வீரப்பன் கூறியுள்ளார்.

ஆறுகள் இணைப்புத் திட்டம் தமிழ்நாட்டிற்குத் தேவையில்லை

ஈடிவி பாரத்திற்கு அவர் அளித்த பிரத்யேகப் பேட்டியில், "தமிழ்நாடு இந்தத் திட்டத்தை வரவேற்றிருக்கிறது. ஆனால் இந்த ஆறுகள் இணைப்புத் திட்டம் தமிழ்நாட்டிற்குத் தேவையில்லை. ஏனெனில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு என்ன நடக்கும் என எவருக்கும் தெரியாது.

இந்தத் திட்டத்தின்படி தமிழ்நாடு வெறும் 83 டிஎம்சி நீரை மட்டும் வெளிமாநிலங்களிலிருந்து கொண்டுவர முடியும். இதற்கு எதற்காக 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட வேண்டும்" எனக் கேள்வி எழுப்பிய நீர்ப்பாசன வல்லுநர், 83 டிஎம்சி நீர் கிடைக்கும் என்றாலும் தமிழ்நாட்டிற்கு 50 டிஎம்சி நீர்தான் வந்துசேரும் என்பதைத் தெளிவுபடுத்தினார்.

"எனவே பொதுப்பணித் துறைக்கு எனது ஆலோசனை என்னவென்றால் மழைக் காலங்களில் குறிப்பாக வடகிழக்குப் பருவ மழையின்போது அக்டோபர், டிசம்பர் மாதங்களில் நமக்கு 260 டிஎம்சி நீர் கிடைக்கிறது.

தமிழ்நாட்டிற்கு ஆறுகள் இணைப்பு பயனுடையதாக இருக்காது

இதில் நாம் ஏரிகள், குளங்களை 1 அல்லது 2 மீட்டர் ஆழப்படுத்தி நீரை சேமித்துவைக்கலாம். எனவே நீர்நிலைகளை ஆழப்படுத்தினால் செலவு 10,000 கோடி வரை மட்டும் செலவு செய்யலாம். இப்படிச் செய்தால் நமக்கு 200 டிஎம்சி நீரை சேமித்துவைக்க முடியும். மேலும் அனைத்து நாள்களிலும் நீர்ப் பற்றாக்குறை இருக்காது" என வீரப்பன் தெரிவித்துள்ளார்.

ஆறுகள் இணைப்புத் திட்டத்திற்குச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது என்ற கேள்விக்கு அவர் கூறியதாவது, ”சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே பெரிய அணைக்கட்டு கட்டுவதையும், ஆற்று நீரைத் தேக்குவதையும் எதிர்த்துவருகிறார்கள்.

அணைகளின் பக்கத்தில் நன்கு வளரும் மரங்கள்

அவர்களுடைய கண்ணோட்டத்தில் மலைகளின் ஓரங்களில், மலைமேல் வசிக்கும் பழங்குடி மக்கள், உழவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் என்று பார்க்கிறார்கள். இரண்டாவது ஒரு ஆற்றைத் திருப்பிவிடும்போது சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படுகிறது எனக் கூறுகிறார்கள்.

குஜராத்தில் பக்ராநங்கல் கட்டும்போதும், கேரளாவின் முல்லைப் பெரியார் அணை கட்டும்போதும் ஆர்வலர்கள் எதிர்த்தனர். ஆனால் என்னுடைய பார்வையில் ஆற்று நீரைத் தேக்கிவைக்கும்போது எல்லா நாள்களிலும் மக்களுக்கு நீர் கிடைக்கிறது. மேலும் அணைகளின் பக்கத்தில் மரங்கள் நன்கு வளர்கின்றன. எனவே சுற்றுச்சூழலும் மேம்படுகிறது" எனக் கூறினார்.

அனைத்து ஆறுகளும் இணைக்கப்படும்

ஆற்று நீர் இணைப்பால் தமிழ்நாட்டிற்கு எவ்வளவு நீர் அதிகமாக கிடைக்கும் என்ற கேள்விக்கு, "தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆற்று நீர், ஊற்று நீர், மழை நீர் உள்ளிட்டவையைக் கணக்கிட்டால் 900 முதல் 1090 டிஎம்சி வரை கிடைக்கிறது.

இதில் வெள்ளத்தினால் 16 ஆறுகளிலிருந்து 250 டிஎம்சி கடலில் கலக்கிறது என ஒரு குழு ஆராய்ச்சி மேற்கொண்டது" எனக் கூறினார்.

கடந்த மத்திய வரவு செலவுத் திட்ட அறிக்கையில் நாட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கோதாவரி, காவேரி, கிருஷ்ணா, பெண்ணாறு, பாலாறு, வைகை, குண்டாறு நதிகள் இணைக்கப்படும் எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மும்பையிலும் ஹிஜாபுக்குத் தடை

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.