ETV Bharat / state

'கோடநாடு கொலை வழக்கில் யார் மீதாவது சந்தேகம் உள்ளதா..?'; பதிலளித்தார் சசிகலா

கோடநாடு கொலை,கொள்ளை வழக்கு தொடர்பான வழக்கு விசாரணை இரண்டாவது நாளாக சசிகலாவிடம் இன்று(ஏப்.22) நடந்து முடிந்துள்ளது.

author img

By

Published : Apr 22, 2022, 10:42 PM IST

”கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் யார் மீதாவது சந்தேகம் உள்ளதா..? “ : பதிலளித்தார் சசிகலா

சென்னை: கோடநாடு கொலை கொள்ளை விவகாரம் தொடர்பாக மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை நேற்று(ஏப்.21) சென்னை தியாகராயநகரில் உள்ள சசிகலாவின் இல்லத்தில் விசாரணை நடத்தினர். முதல் நாள் சுமார் ஐந்தரை மணி நேரம் விசாரணையானது சசிகலாவிடம் நடைபெற்றது.

பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை: இந்த வழக்கு தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்டக் கேள்விகள் சசிகலாவிடம் காவல் துறை தரப்பில் கேட்கப்பட்டுள்ளது. இரண்டாவது நாளான இன்றும் நான்கு மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடைபெற்றது. கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம் நடந்தபோது சசிகலா சிறையில் இருந்ததால் இது தொடர்பான தகவல்களை சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்ப்பாண்டியன் சிறையில் சசிகலாவை சந்தித்துத் தெரிவித்துள்ளார்.

அந்த அடிப்படையில் காவல்துறையின் விசாரணையின்போது சசிகலாவுடன் அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் உடனிருந்துள்ளார்.

சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் பேட்டி

இந்த விசாரணையின்போது காவல்துறை கேள்விகள் மற்றும் சசிகலாவின் பதில்களை டைபிஸ்ட் மூலம் பதிவு செய்து, சசிகலாவிடம் கையெழுத்துப்பெற்றுள்ளனர். மேலும், வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. முக்கியமாக கொள்ளைபோன பொருட்களில் ஏதேனும் முக்கிய ஆவணங்கள், பத்திரங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதா என்ற அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, முன்னாள் அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், சட்டவிரோதமாக சம்பாதித்த சொத்துகளின் பத்திரங்களை வாங்கி வைத்திருந்ததாகவும், அந்த சொத்து பத்திரங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக காவல்துறை தரப்பில் சசிகலாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

முழு ஒத்துழைப்பு தந்த சசிகலா: இந்நிலையில் இரண்டு நாட்கள் சேர்த்து சுமார் ஒன்பதரை மணி நேரத்திற்கும் மேலாக ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை விசாரணை நடத்தி முடித்துள்ளது. விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்,
'2017இல் கோடநாட்டில் நடந்த கொலை,கொள்ளை சம்பவம் தொடர்பான விசாரணை சசிகலாவிடம் நடைபெற்றதாகவும், ஐஜி சுதாகர் தலைமையிலான காவல் துறையினர் சசிகலாவிடம் இரண்டு நாட்களாக விசாரணை நடத்தி முடித்ததாகவும்' அவர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவுப்படி கோடநாடு வழக்கில் இதுவரை நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் சசிகலாவிடம் விசாரணை நடைபெற்றதாகவும், அனைத்து கேள்விகளுக்கும் சசிகலா பதிலளித்து இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், விசாரணை திருப்திகரமாக நடந்ததாகவும், கோடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதாவிற்கு நெருக்கமான நபரான காவலாளி கொலைக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என காவல் துறையிடம் சசிகலா வலியுறுத்தியுள்ளதாக வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறினார். ”வேறு எதுவும் கேள்வி உள்ளதா..?”, என சசிகலா காவல் துறையிடம் கேள்வி கேட்கும் அளவிற்கு காவல் துறையினர் திருப்தி அடைந்து சென்றதாக சசிகலாவின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

யார் மேலாவது சந்தேகம் உள்ளதா..?: ”கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் யார் மீதாவது சந்தேகம் உள்ளதா..?” என காவல் துறை விசாரணை நடத்தியதாகவும், அதற்கு பதிலளிக்கும் வகையில் சந்தேகம் இருப்பதாகக் கூறி காவல்துறை விசாரணையில் சசிகலா பதில் அளித்துள்ளதாகவும் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

சட்டத்திற்குட்பட்டு வயது மூப்பைக்கொண்டு காவல் துறை நேரில் வந்து சசிகலாவிடம் விசாரணை நடத்தியதாகவும், அடுத்த கட்ட விசாரணைக்கு நகரும் என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளாக சசிகலாவும், மற்றவர்களும் சுயகட்டுப்பாட்டுடன் கோடநாடு எஸ்டேட்டிற்குச் செல்லாமல் இருந்ததால் தான், எந்த வித தடயங்களும் அழியாமல் காவல் துறையினரிடம் அடுத்த கட்ட விசாரணைக்கு உதவியிருப்பதாகவும், இனிமேல் உடைந்த கதவை புதுப்பிக்கவும், செல்லவும் எந்த தடையுமில்லை என ராஜாசெந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற உத்தரவை மேற்கோள்காட்டி ஒரு வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது பொதுவெளியில் விவாதம் நடத்த வேண்டாம் என்ற அடிப்படையில் வழக்கின் தகவல்கள் குறித்து பேசாமல் இருப்பதாகத் தெரிவித்த அவர் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு நல்ல முறையில் விசாரணை சென்று கொண்டிருப்பதாகவும், புதிதாக எந்த விதப் புகாரும் அளிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் விசாரணைக்கு சசிகலா முழு ஒத்துழைப்பு அளித்திருப்பதாகவும் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜாசெந்தூர்பாண்டியன் கூறினார்.

இதையும் படிங்க: LIVE: கொளத்தூரில் உள்ள எவர்வின் பள்ளியின் 30ஆம் ஆண்டுவிழாவில் முதலமைச்சர் பங்கேற்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.