ETV Bharat / state

சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம்!

author img

By

Published : Jun 26, 2021, 11:22 AM IST

போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராகவும் இன்று (ஜூன் 26) சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம்
சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம்

உலகளவில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் இன்று (ஜூன் 26) கடைபிடிக்கப்படுகிறது.

இது கடந்த 1989ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஜூன் 26ஆம் தேதியன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. மனித சமூகத்திற்கு போதைப் பொருள் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராகவும் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.

சிறுவர்களை அடிமையாக்கிய போதைப் பொருள்:

உலகளவில் 40 கோடி பேர் போதைப்பொருள்களுக்கு அடிமையாகியுள்ளதாக, பல ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மட்டும் 1 கோடி முதல் 4 கோடி பேர் வரை, இந்த போதைப் பொருள்களுக்கு அடிமையாகவுள்ளனர். தற்போதுள்ள காலகட்டத்தில் இந்த போதைப் பழக்கமானது, சிறுவர்களை அடிமையாக்கியுள்ளது.

இந்த போதைப் பழக்கத்தால் பல சிறுவர்கள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 17 வயது முதல் 25 வயதுடையவர்கள் அதிகளவில் போதைப் பொருள்களை பயன்படுத்துவதாகவும் ஆய்வில் தெரிகிறது.

தமிழ்நாட்டில் போதைப் பொருள்களைப் பயன்படுத்துவதில் திருச்சி மூன்றாவது இடத்தில் உள்ளது.

போதைப் பொருள்
போதைப் பொருள்கள்

வலம் வரும் போதைப் பொருள்கள்:

இதில், பள்ளி மாணவர்கள் அதிகளவில் இந்தப் பழக்கத்திற்கு அடிமையாகவுள்ளதாக கூறப்படுகிறது.

கஞ்சா, போதை ஊசிகள், கூல் லிப், ஹான்ஸ் போன்ற பல போதைப் பொருள்கள் மக்களை சுற்றி வலம் வந்துகொண்டிருக்கின்றன. இந்தப் போதைப் பழக்கம், பலரையும் தவறான வழிகளில் செல்வதற்கு வழிவகை செய்து கொடுக்கிறது.

தரவுகளை ஆராய்ந்து பார்த்தால், அதில் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் போதையில் இருந்ததாக தான் குறிப்பிடப்பட்டிருக்கும்.

போதையில் இருந்தால் தைரியம் வரும் என சில மூடர்கள் தங்களையே ஏமாற்றிக்கொண்டு, இந்த போதைப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர்.

போதைப் பொருள் ஒழிப்பு தினம்
போதைப் பொருள் ஒழிப்பு தினம்

போதைப் பழக்கத்தால், ஆண்டுதோறும் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் உயிரிழந்து வருவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நம்மையும், நம்மை சுற்றியுள்ளவர்களையும் பாதிக்கக்கூடிய இந்தப் பழக்கத்தை அனைவரும் கைவிட்டு வாழ்வில் சரியான பாதையில் செல்ல வேண்டும்.

இந்தப் போதைப் பழக்கத்திற்கு எதிராக செயல்பட்டு போதைப் பொருளை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே 'இந்த போதை ஒழிப்பு தினம்' அனுசரிக்கப்படுகிறது.

இதையும் படிங்க: போதைக்கு வலி நிவாரணி மாத்திரை விற்பனை: 4 பேர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.