சென்னை: சர்வதேச மகளிர் ஓபன் டென்னிஸ் தொடர், சென்னை நுங்கம்பாக்கம் SDAT மைதானத்தில் இன்று (செப் 12) தொடங்க உள்ளது. செப்டம்பர் 18-ம் தேதி வரை ஒரு வாரம் நடைபெறும் இந்த போட்டியில் சர்வதேச அளவிலான விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்த போட்டிகள் ஒற்றையர் இரட்டையர் என இரண்டு பிரிவுகளில் நடைபெறுகிறது. ஒற்றையர் பிரிவில் 32 வீராங்கனைகளும் இரட்டையர் பிரிவில் 32 வீராங்கனைகளும் மோதவுள்ளனர். மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில் பங்கேற்கும் 32 வீராங்கனைகளில் 26 வீராங்கனைகள் நேரடியாக தகுதி சுற்றுக்கு தேர்வு பெற்றவர்கள். மீதமுள்ள 6 வீராங்கனைகள் தகுதி சுற்று மூலம் பிரதான சுற்றில் விளையாடவுள்ளனர்.
தமிழ்நாட்டை சேர்ந்த 2 பேர் மற்றும் மொத்தமாக இந்தியாவை சேர்ந்த 5 பேர் பங்கேற்ற, 24 வீராங்கனைகள் கொண்ட தகுதி சுற்று ஆட்டங்கள் நேற்று (செப் 11) முடிவடைந்த நிலையில், தகுதி சுற்று ஆட்டங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள 6 வீராங்கனைகள் இன்று நடைபெற உள்ள பிரதான போட்டிகளின் முதல் சுற்று ஆட்டத்தில் விளையாட உள்ளனர்.
சென்னை ஒபன் தொடரில் மகுடம் சூடும் வீராங்கனைக்கு சர்வதேச அளவில் 250 புள்ளிகள் வழங்கப்படும். மேலும் இந்த தொடரில் வெற்றி பெறும் வீராங்கனைகளுக்கு 2 கோடி ரூபாய் பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக இந்தியாவில் மகளிருக்கான டென்னிஸ் போட்டி நடைபெறுவது மகிழ்சியளிக்கிறது என இந்திய வீராங்கனைகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஆசிய கூடைப்பந்து சாம்பியன் போட்டி: கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா