ETV Bharat / state

செவிலியர் நியமனத்திற்கு இடைக்காலத் தடை! - செவிலியர் நியமனம்

சென்னை: தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் நியமனம் செய்ய இடைக்காலத் தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

chennai high court
author img

By

Published : Sep 13, 2019, 9:23 AM IST

சிவகங்கையைச் சேர்ந்த சோனியாகாந்தி, ராமநாதபுரத்தைச் சேர்ந்த கலைவாணி உள்பட 12 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

அதில், "தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் தேர்வுக்கான அறிவிப்பாணையை மருத்துவ தேர்வு வாரியம் வெளியிட்டிருந்தது.

அதற்கான தேர்வு ஜூன் மாதம் 9ஆம் தேதி நடத்தப்பட்டு முடிவுகளும் வெளியிடப்பட்டன. ஆனால், தேர்வு நடைமுறையை முறையாக பின்பற்றி வெளியிடவில்லை, தேர்வில் நிறைய விதிமீறல்கள் உள்ளது. தேர்வு பட்டியலும் நியாயமான முறையில் வெளியிடப்படவில்லை. நடந்து முடிந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இவ்வழக்கு விசாரணை நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் நியமனத்திற்கான நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடைவிதித்தார். மேலும், இவ்வழக்கு குறித்து மருத்துவத் தேர்வு வாரியம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

Intro:Body:தமிழக அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் நியமனம் செய்ய இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கையை சேர்ந்த சோனியாகாந்தி, ராமநாதபுரத்தை சேர்ந்த கலைவாணி உட்பட 12 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், வழக்கில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் தேர்வுக்கான அறிவிப்பாணையை மருத்துவ தேர்வு வாரியம் வெளியிட்டிருந்தது.

அதற்கான தேர்வு கடந்த ஜூன் மாதம் 9 ம் தேதி நடத்தப்பட்டு அதற்கான முடிவுகளும் வெளியிடப்பட்டது.

ஆனால் தேர்வு நடைமுறையை முறையாக பின்பற்றி வெளியிடபடவில்லை எனவும் தேர்வில் நிறைய விதிமீறல்கள் உள்ளதாகவும், தேர்வு பட்டியலும் நியாயமான முறையில் வெளியிடபடவில்லை. நடந்து முடிந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கேட்டுக்கொண்டிருந்தனர்.

இந்த வழக்கு, நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் நியமனத்திற்கான நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் வழக்கு குறித்து மேலும் மருத்துவ தேர்வு வாரியம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.