ETV Bharat / state

எல்ஐசி உதவியாளர் பணி நியமனத்திற்கு இடைக்காலத் தடை - உயர் நீதிமன்றம் - எல்ஐசி உதவியாளர் பணி நியமனம்

சென்னை: எல்ஐசி நிறுவனத்தில் உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்க நவம்பர் 20-ம் தேதி வரை தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

chennai high court
author img

By

Published : Nov 2, 2019, 2:19 PM IST

முழுநேர தற்காலிக ஊழியர்களாக பணியாற்றியவர்களை பணிநீக்கம் செய்து எல்ஐசி நிர்வாகம் 1991ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதை எதிர்த்து பணி நீக்கம் செய்யப்பட்ட முழுநேர தற்காலிக ஊழியர்கள் நலச் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. மேலும், இதனடிப்படையில் பணி நிரந்தரம் செய்யப்படுவர்களின் பட்டியல் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், எல்ஐசிக்கு உதவியாளர்கள் தேர்வுக்கு விண்ணப்பங்களை வரவேற்று செப்டம்பர் 17ஆம் தேதி ஆன்லைனில் அறிவிப்பாணை வெளியானது. இந்த அறிவிப்பாணையை ரத்து செய்து, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தங்களுக்கு பணி நியமனம் வழங்க உத்தரவிடக் கோரி, பணி நீக்கம் செய்யப்பட்ட முழுநேர தற்காலிக ஊழியர்கள் நலச் சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தபோது, இந்த உதவியாளர் பணயிடங்களுக்கான தேர்வை நடத்தினால் தங்களுக்கு பணி நியமனம் கிடைக்காமல் பாதிப்பு ஏற்படும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, உதவியாளர் தேர்வு நடைமுறையை தொடர அனுமதி வழங்க வேண்டும் என்று பணி நியமன உத்தரவு ஏதும் வழங்கப்பட மாட்டாது எனவும் எல்ஐசி தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்த நீதிபதி, எல்ஐசி நிறுவனத்துக்கு புதிதாக தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு நவம்பர் 20ஆம் தேதி வரை பணி நியமன உத்தரவு வழங்கக் கூடாது என தடைவிதித்து உத்தரவிட்டார்.

மேலும், இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி எல்ஐசி தரப்புக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கு வருகிற 21ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

Intro:Body:எல்.ஐ.சி நிறுவனத்தில் உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்க இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முழு நேர தற்காலிக ஊழியர்களாக பணியாற்றியவர்களை பணி நீக்கம் செய்து எல்.ஐ.சி நிர்வாகம் 1991 ம் ஆண்டு உத்தரவு பிறபித்திருந்தது.

இதை எதிர்த்து பணி நீக்கம் செய்யப்பட்ட முழுநேர தற்காலிய ஊழியர்கள் நல சங்கம் சார்பில் மத்திய அரசு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. மேலும் இந்த உத்தரவின் அடிப்படையில் பணி நிரந்தரம் செய்யப்படுவர்களின் பட்டியல் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் எல்.ஐ.சிக்கு உதவியாளர்கள் தேர்வுக்கு விண்ணப்பங்களை வரவேற்று கடந்த செப்டம்பர் 17 ம் தேதி ஆன்லைனில் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.

இந்த அறிவிப்பாணையை ரத்து செய்து, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தங்களுக்கு பணி நியமனம் வழங்க உத்தரவிடக் கோரி
பணி நீக்கம் செய்யப்பட்ட முழுநேர தற்காலிய ஊழியர்கள் நலச் சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்த போது, இந்த உதவியாளர் பணயிடங்களுக்கான தேர்வை நடத்தினால் தங்களுக்கு பணி நியமனம் கிடைக்காமல் பாதிப்பு ஏற்படும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

உதவியாளர் தேர்வு நடைமுறையை தொடர அனுமதி வழங்க வேண்டும் எனவும், பணி நியமன உத்தரவு ஏதும் வழங்கப்பட மாட்டாது எனவும் எல் .ஐ.சி தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

இதை பதிவு செய்த நீதிபதி, எல் ஐ சி நிறுவனத்துக்கு புதிதாக தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு நவம்பர் 20ம் தேதி வரை பணி நியமன உத்தரவு வழங்க கூடாது என தடை விதித்து உத்தரவிட்டார்.

மேலும், மனுவுக்கு பதிலளிக்கும்படி எல் ஐ சி தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நவம்பர் 21ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.