ETV Bharat / state

'கில்டு' பெயரை பயன்படுத்த இடைக்கால தடை!

சென்னை: ஜாக்குவார் தங்கம், தலைவராக உள்ள தயாரிப்பாளர் சங்கத்தின் பெயரையும், அச்சங்கத்தின் பெயரில் உள்ள வங்கிக் கணக்கில், பணம் வசூலிக்கவும் இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

chennia HC
author img

By

Published : Jul 29, 2019, 9:35 PM IST

தமிழ் திரைப்படத்தில் பிரபல சண்டை பயிற்சியாளராக இருப்பவர் எஸ்.பி.ஜாக்குவார் தங்கம். இவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், தென்னிந்திய திரைப்படம், தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் கில்டு தலைவராக உள்ளேன். இதே பெயரில், போலியாக ஒரு சங்கத்தை பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட சிலர் தொடங்கியுள்ளனர்.

அச்சங்கத்துக்கு தலைவராக பாலசுப்பிரமணியம் உள்ளார். இவர்கள், நான் தலைவராக இருக்கும் சங்கத்தின பெயரையும், அதன் மயில் சின்னத்தையும் தவறாக பயன்படுத்துவதுடன், பலரிடம் இருந்து பணத்தை பெற்று மோசடி செய்துவருகின்றனர். அச்சங்கத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து என்னை நீக்கிவிட்டதாகவும் அறிவித்துள்ளனர்.

எங்களது சங்கம், சங்கங்களின் பதிவாளரிடம் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, எங்கள் சங்கத்தின் பெயரை பயன்படுத்தவும், உறுப்பினர்களிடம் இருந்து பணம் வசூலிக்கவும், குறிப்பாக வடபழனியில் உள்ள யூனியன் பாங்க் ஆஃப் இந்தியாவில் உள்ள கணக்கு மூலம் பணம் வசூலிக்க தடை விதிக்கவேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஆர்.மகேஸ்வரி ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பிறப்பித்த இடைக்கால உத்தரவில், எதிர்மனுதாரர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் மனுதாரரின் தென்னிந்திய திரைப்படம், தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் ’கில்டு’ என்ற பெயரை பயன்படுத்த இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இந்த சங்கத்தின் பெயரில் வங்கிக் கணக்குகள் தொடங்கி, குறிப்பாக யூனியன் பாங்க் ஆஃப் இந்தியாவின் வடபழனி கிளையில் உள்ள வங்கிக் கணக்கு மூலம் பணம் வசூலிக்கவும் இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இந்த மனுவுக்கு பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் வருகிற ஆகஸ்டு 9ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டார்.

Intro:Body:ஜாக்குவார் தங்கம் தலைவராக உள்ள தயாரிப்பாளர் சங்கத்தின் பெயரையும், அச்சங்கத்தின் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கி பணம் வசூலிக்கவும் இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் திரைப்படத்தில் பிரபல சண்டை பயிற்சியாளராக இருப்பவர் எஸ்.பி.ஜாக்குவார் தங்கம். இவர், சென்னை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் கில்டு தலைவராக உள்ளேன். இதே பெயரில், போலியாக ஒரு சங்கத்தை பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட சிலர் தொடங்கியுள்ளனர்.

அச்சங்கத்துக்கு தலைவராக பாலசுப்பிரமணியம் உள்ளார். இவர்கள், நான் தலைவராக இருக்கும் சங்கத்தின பெயரையும், அதன் மயில் சின்னத்தையும் தவறாக பயன்படுத்துவதுடன், பலரிடம் இருந்து பணத்தை பெற்று மோசடி செய்து வருகின்றனர். அச்சங்கத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து என்னை நீக்கி விட்டதாகவும் அறிவித்துள்ளனர்.

எங்களது சங்கம், சங்கங்களின் பதிவாளரிடம் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, எங்கள் சங்கத்தின் பெயரை பயன்படுத்தவும், உறுப்பினர்களிடம் இருந்து பணம் வசூலிக்கவும், குறிப்பாக வடபழனியில் உள்ள யூனியன் பாங்க் ஆப் இந்தியா என்ற வங்கியியில் உள்ள கணக்கு மூலம் பணம் வசூலிக்க தடை விதிக்கவேண்டும்
என குறிப்பிடப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஆர்.மகேஸ்வரி ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பிறப்பித்த இடைக்கால உத்தரவில், எதிர்மனுதாரர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் மனுதாரரின் தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப் பாளர்கள் கில்டு என்ற பெயரை பயன்படுத்த இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இந்த சங்கத்தின் பெயரில் வங்கிக் கணக்குகள் தொடங்கி, குறிப்பாக யூனியன் பாங்க் ஆப் இந்தியா என்ற வங்கியின் வடபழனியில் கிளையில் உள்ள வங்கிக் கணக்கு மூலம் பணம் வசூலிக்கவும் இடைக்கால தடை விதிக்கப்படுகிறது.

இந்த மனுவுக்கு பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் வருகிற ஆகஸ்டு 9-ந்தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.