சென்னை: இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் மக்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சியால் தமிழக அரசு சார்பில் ரூ.80 கோடி மதிப்பில் 40 ஆயிரம் டன் அாிசி, ரூ.15 கோடி மதிப்பில் 500 டன் பால் பவுடர், 28 கோடி மதிப்பில் 137 வகையான உயிர்காக்கும் அத்தியாவசிய மருந்து பொருள்கள் அடங்கிய கப்பல் நாளை (மே18) இலங்கைக்கு புறப்படுகிறது.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அரிசி, மருந்து பொருள்கள், பால் பவுடர் ஆகியவற்றை இலங்கையில் மக்களுக்கு அனுப்ப 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அடங்கிய குழு அமைத்து தமிழ்நாடு உத்தரவிட்டு இருக்கிறது.
இதனையடுத்து, இலங்கைக்கு அனுப்ப வைக்கப்பட வேண்டிய பொருட்கள் சென்னை துறைமுகத்திற்கு அனுப்பும் பணி இறுதி கட்டத்தை எட்டியதை அடுத்து, நாளை அனைத்து பொருள்களையும் சென்னை துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கபட உள்ளது. இலங்கைக்கு அனுப்ப உள்ள பொருட்களை தமிழநாடு முதலமைச்சர் நாளை கொடியசைத்து தொடங்கிவைக்கிறார்.
இதையும் படிங்க:இலங்கையில் நிலவும் நெருக்கடி குறித்து சர்வேஸ்வரனுடன் ஒரு நேர்காணல்