தமிழ்நாட்டில் நடப்புக் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நேற்றுமுதல் (ஜூன் 14) துவங்கி உள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்வதற்காக ஏராளமான மாணவர்கள் ஆர்வமுடன் வருகின்றனர். 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளில் மாணவர்கள் சேருவதற்கு அதிக அளவில் விண்ணப்பித்து வருகின்றனர்.
அதேபோல் தனியார்ப் பள்ளியில் படித்த மாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்த முடியாததால் அரசுப் பள்ளியில் சேர்வதற்கு ஆர்வம் காட்டிவருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழகத்தின் மூலம் அச்சிடப்பட்ட பாடப்புத்தகங்கள் மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அந்தப் புத்தகங்களை ஒவ்வொரு பள்ளிக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாவட்ட கல்வி அலுவலர்கள் பிரித்து வாகனங்களின் மூலம் அனுப்பிவைக்கின்றனர்.
சென்னை மாவட்டத்தில் மத்திய சென்னை கல்வி மாவட்ட அலுவலகத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு உரிய பாடப்புத்தகங்களை மாவட்ட கல்வி அலுவலர் சண்முகவேல் தலைமையில் பள்ளிகளுக்குப் பிரித்து அனுப்பிவருகின்றனர்.
மாணவர்களுக்குப் பாடப் புத்தகங்கள் வழங்கும் நாள் குறித்து பள்ளிக் கல்வித் துறை அறிவித்த பின்னர் பாடப்புத்தகம் வழங்கப்படுமென கல்வித் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: அரசின் நடவடிக்கையால் மகிழ்ச்சி: தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்