ETV Bharat / state

தேங்கி கிடக்கும் திடக்கழிவுகளை அகற்றும் பணி தீவிரம்

author img

By

Published : Jun 22, 2021, 9:49 PM IST

சென்னையில் வட கிழக்கு பருவ மழைக்கு முன்னர் மழை நீர் வடிகால், கழிவு நீர் கால்வாய் அடைப்புகள் அகற்றும் பணிகள், நீண்ட நாட்களாக தேங்கி கிடக்கும் திடக்கழிவுகளை அகற்றும் பணிகளை மாநகராட்சி தீவிரபடுத்தபட்டுள்ளது.

waste
waste

சென்னை மாநகராட்சி ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”கடந்த மாதம் தொடங்கி 10 நாட்கள் நடைபெற்ற தீவிர தூய்மை பணிகள் மூலம் 3ஆயிரத்து 260 மெட்ரிக் டன் குப்பை கழிவுகளும், 10 ஆயிரத்து 85 மெட்ரிக் டன் கட்டட கழிவுகள் என 13ஆயிரத்து 345 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் ஜூன் 26ஆம் தேதி வரை தீவிர தூய்மை படுத்தும் பணிகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதே போல் சென்னை குடிநீர், கழிவு நீரகற்றும் வாரியம் மூலம் கழிவு நீர் கால்வாய் தூர்வாரும் பணிகள் ஜூன் 30ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள 15 மண்டலங்களிலும் மொத்தம் 454 கழிநீர் அகற்று வாகனங்கள் மூலம் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னையில் மட்டும் 4,200கிமீ தொலைவிற்கு கழிவு நீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 1 லட்சத்து 15 ஆயிரம் முகப்பு பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. முகப்பு பகுதிகளில் உள்ள அடைப்புகளை சிறிய வாகனங்கள் மூலமும் ஒரு முகப்புக்கும் மற்றோரு முகப்புக்கும் இடைபட்ட பகுதியில் உள்ள அடைப்பை சரி செய்ய நவீன இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன.

மழை நீர் தேங்கும் என ஏற்கனவே கண்டெடுக்கப்பட்ட பகுதிகளுக்கு முக்கியதுவம் கொடுத்து அந்த பகுதிகளில் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. பருவ மழையின் போது மழை நீர் தேங்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தூய்மைப் பணிகள் தீவிரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.