சென்னை: தலைமைச் செயலகத்தில் வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது , "வடகிழக்கு பருவமழை அக்டோபர் மூன்றாவது வாரத்தில் தொடங்கி டிசம்பர் வரை நீடிக்க உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
வடிகால் சீரமைப்பு பணிக்காக நிதி ஒதுக்க முதலமைச்சரிடம் கோரி உள்ளோம். நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்வதால் வெள்ள அபாய சூழல் ஏற்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை 4,267 மழை நீர் வடிகால்கள் தூர்வாரப்பட்டுள்ளன. குறித்த நேரத்தில் கண்மாய்களை திறந்துவிட பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மாநகராட்சிக்கு அறிவுறுத்தல்
சென்னையில் இந்த ஆண்டு மழை நீர் தேங்காமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள மாநகராட்சிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் பொதுமக்கள் - நடவடிக்கை எடுக்குமா அரசு?