ETV Bharat / state

ஒருங்கிணைந்த கல்வி திட்ட நிதியை குறைத்த ஒன்றிய அரசு - பள்ளி மாணவர்களுக்கான நிதி குறைப்பு

ஒருங்கிணைந்த கல்வி திட்டமான சமக்ர சிக்‌ஷா அபியானின் கீழ் 2020 - 2021ஆம் ஆண்டில் 3 ஆயிரத்து 275 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது நிதி குறைக்கப்பட்டுள்ளதாக கல்வியாளர்களை கவலை தெரிவித்துள்ளனர்.

ஒருங்கிணைந்த கல்வி திட்டம்; நிதியை குறைத்த ஒன்றிய அரசு!

author img

By

Published : Mar 5, 2022, 9:37 AM IST

சென்னை: ஒன்றிய அரசு கல்விசார்ந்த திட்டங்களுக்கென்று அனைத்து மாநிலங்களுக்கும் சமக்ரசிக்‌ஷா அபியான் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்கிறது.இத்திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்படும் நிதி, பள்ளி கட்டடங்கள் கட்டுதல், பகுதி நேர ஆசிரியர்களுக்கான ஊதியம் வழங்குதல், ஆசிரியர்களுக்கான பல்வேறு பயிற்சிகள் வழங்குதல், பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் அமைப்பது உள்ளிட்டவைகளுக்கு செலவிடப்படுகிறது.

பள்ளிக்கல்வித்துறையின் மூலம் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் எனும் பெயரில், 10ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கான திட்டங்களை செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது. கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்காக ஒருங்கிணைந்த பள்ளிகல்வித்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2018 -2019ஆம் கல்வியாண்டில், 2 ஆயிரத்து 837 கோடியே 69 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

பின்னர் இந்த நிதியானது 2019-2020ஆம் ஆண்டில், 3 ஆயிரத்து 275 கோடியாக அதிகரிக்கப்பட்டது. கரோனா தொற்றால் கல்விச்சூழல் பாதிக்கப்பட்டிருந்த ஆண்டான 2020-2021ஆம் ஆண்டில், 3 ஆயிரத்து 186 கோடியே 86 லட்சம் ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிதியானது கடந்த 2020ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 89 கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. கரோனா காலகட்டத்தில் பிரதானமாக பாதிக்கப்பட்டது கல்வித்துறையாகும். இதனையடுத்து மாணவர்களுக்கான கற்றல் இழப்புகளை செயல்படுத்த வேண்டி பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டிய சூழ்நிலையில், ஒன்றிய அரசு நிதியை குறைத்து ஒதுக்கீடு செய்துள்ளது கல்வியாளர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: மேகதாது அணையைக் கட்ட கர்நாடக அரசு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.