ETV Bharat / state

பள்ளிகளில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும்முன் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தல் - மின்கம்பங்கள்

தமிழ்நாட்டில் வடகிழக்குப்பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை
வடகிழக்கு பருவமழை
author img

By

Published : Oct 6, 2022, 8:46 PM IST

சென்னை: வடகிழக்குப் பருவமழைத் தொடங்க உள்ளதைத்தொடர்ந்து பள்ளிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், பள்ளி வளாகத்தைச்சுத்தமாக பராமரிப்பது குறித்தும் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், 'அனைத்து வகைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், பணியாளர்கள் பாதுகாப்புசார்ந்து வடகிழக்குப்பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

  • பள்ளி வளாகத்திற்குள் மாணவர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தக்கூடிய வகையில் உள்ள திறந்தநிலை கிணறுகள், நீர்நிலைத் தொட்டிகள், இடிந்துவிழும் நிலையில் உள்ள கட்டிடங்கள், மற்றும் சுற்றுச்சுவர் எதேனும் இருப்பின் அவற்றை உடன் அற்றிட உரிய வழிமுறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
  • அனைத்துப் பள்ளிகளிலும், வளாகங்களில் ஆழ்துளைக்கிணறுகள் இருந்தால் அது பாதுகாப்பாக மூடப்பட்டுள்ளனவா என ஆய்வு செய்ய வேண்டும். பள்ளி வளாகத்தில் பயன்பாடில்லா ஆழ்துளைக்கிணறுகள், கழிவுநீர் தொட்டிகள், கிணறுகள், நீர் சேமிப்புத்தொட்டிகள் போன்றவை நிரந்தரமாக மூடப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • மூடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் தொட்டிகள் உள்ள இடங்களை அடையாளம் குறியிட்டு, தனியாக அடையாளப்படுத்த வேண்டும். அவற்றை தரை மட்டத்தில் இருந்து உயர்த்தி, பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்த வேண்டும்.
  • பள்ளி வளாகத்தில் ஆபத்தான நிலையில் உள்ள உயர் மின் அழுத்தமுள்ள மின்கம்பங்கள் மற்றும் அறுந்து தொங்கக்கூடிய மின்கம்பிகள் இருப்பின் அவைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
    மின் இணைப்புகள் சரியாக உள்ளனவா என்றும், மின் கசிவு, மின்சுற்று கோளாறுகள் ஏதேனும் உள்ளனவா என்பதை ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதிப்படுத்திடவும், தேவையெனில் மின் இணைப்பைத் தற்காலிகமாக துண்டித்து வைக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.
  • பள்ளி வளாகத்தில் விழும் நிலையில் மரங்கள் ஏதேனும் இருப்பின் அதனை உடனடியாக அப்புறப்படுத்தவும் மற்றும் ஆபத்தான நிலையிலுள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
  • மின் சுவிட்சுகள் (Switches) சரியாக உள்ளனவா, மழைநீர் படாத வகையில் உள்ளனவா என்பதையும் தலைமையாசிரியர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.
  • பள்ளியில் உள்ள அனைத்துக் கட்டடங்களின் மேற்கூரைகள் உறுதித் தன்மையுயும், மேற்கூரையில் நீர் தேங்காத வகையிலும், உடனடியாக தேங்கியுள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
  • பள்ளியில் பத்திரப்படுத்தப்பட வேண்டிய முக்கிய ஆவணங்கள் தரைதளத்தில் வைக்கப்பட்டிருப்பின் மழை நீரினால் சேதம் ஏற்படாவகையில் பாதுகாப்பாக வேறு தளங்களில் மாற்றி பாதுகாப்பாக பராமரிக்கப்படுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேல் தளத்தில் தடைப்பட்ட வடிகால்கள், மாடிப் படிக்கட்டுகளை சுத்தம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பலவீனமான மற்றும் பழுதடைந்துள்ள கட்டடங்களைப் பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டும்.
  • சுகாதாரம் மற்றும் உயிர்ப் பாதுகாப்பிற்கு செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை குறித்து மாணவர்களுக்கு வாரம்தோறும் ஒரு நாள் காலை வழிபாட்டுக் கூட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்’ உள்ளிட்ட அறிவுரைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: சென்னையில் புதிதாக பூங்கா, விளையாட்டுத் திடல் அமைக்க மாநகராட்சித் திட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.