ETV Bharat / state

நூலகத்திற்கென ஒரு பாடவேளை கட்டாயம்; பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

author img

By

Published : Dec 5, 2021, 4:48 PM IST

பள்ளிகளில் மாணவர்களிடம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வாரம் ஒரு பாடவேளையை நூலகத்திற்கு கட்டாயம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

நூலகத்திற்கென ஒரு பாடவேளை கட்டாயம்; பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!
நூலகத்திற்கென ஒரு பாடவேளை கட்டாயம்; பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

சென்னை: மாணவர்களிடையே வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த பள்ளிக்கல்வித்துறையால் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், "பாடநூல்களுக்கு வெளியே புத்தக வாசிப்பை ஒரு வாழ்வியல் முறையாக மாணவர்கள் மேற்கொள்வதை மாணவர்கள் கைகொள்வதை இலக்காக கொண்டு செயல்பட வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.

நூலகப் பாடவேளை உறுதி

ஒவ்வொரு வகுப்புக்கும் வாரம் ஒருமுறை நூலகப் பாடவேளை இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தனி அறை ஒதுக்கீடு செய்து தேவையான மேஜை, அலமாரி வசதிகளை ஏற்படுத்த வேண்டும். அத்துடன் புத்தகம் வழங்கல் பதிவேட்டைத் தயார் செய்து நூலகத்தை உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

இடப் பற்றாக்குறையுள்ள பள்ளிகளில் ஏதேனும் ஒரு வகுப்பறையை பயன்படுத்திக் கொள்ளலாம். பள்ளிகளில் நூலக நேரம் தவிர்த்து, மாணவர்கள் தமிழ், ஆங்கில நாளிதழ்கள் வாசிப்பதற்காக நூலகம் திறக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு வாரமும் மாணவர்கள் பள்ளி நூலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு புத்தகத்தை கட்டாயம் வாசிக்கத் தர வேண்டும். மாணவர்கள் அந்தப் புத்தகத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்லவும் அனுமதிக்க வேண்டும்.

புத்தக வாசிப்பு போட்டி

அடுத்தடுத்த வாரங்களில் புத்தகத்தை வாசித்து முடித்த மாணவனுக்கு வேறு புத்தகம் கட்டாயம் அளிக்க வேண்டும். புத்தகத்தை வாசிப்பது குறித்தும் மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தலாம்.

மேலும் வட்டார அளவிலும், மாவட்ட அளவிலும் மாதந்தோறும் போட்டிகள் நடத்தலாம். மாணவர்களை மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு அனுப்பலாம். மேலும் நூலக சுற்றுலாவிற்கும் மாணவர்களை அழைத்துச் செல்லலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கடந்த ஆட்சியில் செய்த தவறுகளை அதிமுகவினர் ஏற்றுக்கொள்ள வேண்டும் - அமைச்சர் செந்தில் பாலாஜி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.