கரோனா தொற்று இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் சென்னையில் உள்ள தென்னக ரயில்வே தலைமை அலுவலகம், சென்னை கோட்ட அலுவலகம் ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்கள் சுழற்சி முறையில் பணிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது. வாரத்தில் 3 நாட்கள் அலுவலகத்திலும், மீதமுள்ள நாட்கள் வீடுகளிலும் அவர்கள் பணியாற்ற தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் உத்தரவிட்டுள்ளார்.
கரோனா தொற்று பரவலைக் குறைக்கும் வகையில் இந்த முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. வரும் 30 ஆம் தேதி வரை இந்த முறை தொடரும். அதன் பின் அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேபோல் ரயில்வே பணிமனைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் பணி நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 45 வயதுக்கு மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மதுரை மருத்துவக் கல்லூரி பேராசிரியைக்கு கரோனா!