ETV Bharat / state

'12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு வராதவர்களுக்கு உடனடி தேர்வுகள் நடத்தப்படும்' - அமைச்சர் அன்பில் மகேஷ் - செய்தியாளர்களைச் சந்தித்த அன்பில் மகேஷ்

மொழி தேர்வை எழுதாமல் விடுபட்டுள்ள மாணவர்கள் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் நடைபெறக்கூடிய தேர்வுகளை எழுத வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 16, 2023, 4:01 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சுமார் 50ஆயிரம் மாணவர்கள் தேர்வில் பங்கேற்காமல் இருந்தனர். இது குறித்து பல்வேறு தரப்பில் விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பொதுத் தேர்வுகளில் மொழித்தேர்வை எழுதாமல் இருந்த மாணவர்கள் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

தொடர்ந்து அன்பில் மகேஷ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். “பிளஸ் டூ பொதுத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் இத்தகைய தேர்வுகளை எழுதாமல் மாணவர்கள் விடுமுறை எடுத்த விவகாரம் தொடர்பாக பள்ளி கல்வித்துறை அதிகாரியுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது.

எஞ்சிய பொதுத்தேர்வுகளில் மாணவர்கள் விடுமுறை எடுக்காமல் எழுதக்கூடிய வகையில் பள்ளியில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது மொழித் தேர்வுகளை எழுதாமல் விட்டுள்ள மாணவர்களுக்கு வருகிற ஜூன் அல்லது ஜூலை மாதம் நடைபெறக்கூடிய துணைத் தேர்வுகளை எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

மேலும், 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யும் திட்டம் இல்லை எனத் தெரிவித்த அவர் ஒன்று முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான தேர்வை முன்கூட்டியே நடத்தவும் அரசின் பரிசீலனை இல்லை எனவும் தெரிவித்தார். மேலும், ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாவட்ட கல்வி அதிகாரிகள் மூலம் மாணவர்கள் தேர்வு எழுதுவதன் அவசியத்தை அவர்களுக்கு பெற்றோர்களிடம் எடுத்துரைக்க இருப்பதாகவும், மாணவர்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக ''நான் முதல்வன்'' (https://www.naanmudhalvan.tn.gov.in/) உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்களிடமும் மாணவர்களிடம் எடுத்துக்கூறி தேர்வு எழுதவும் அவசியத்தை எடுத்துக் கூற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் எண்ணிக்கை மற்றும் வருகைப் பதிவை கண்காணிக்க வேண்டும். பொதுத்தேர்வுக்கு வருகைப்பதிவு குறையும் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் உடனடியாக ஆய்வு செய்து, அதனை சரி செய்ய வேண்டும்.

விரைவில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியுள்ள நிலையில் அதிலும் 100 விழுக்காடு மாணவர்கள் பொதுத்தேர்வை எழுத கூடிய வகையில் அதற்கானப் பணிகளையும் கல்வித்துறை தொடங்கி இருக்கிறது. கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பொதுத் தேர்வு எழுதக்கூடிய மாணவர்கள் பல்வேறு காரணங்களால் தேர்வு எழுதாமல் இருக்கின்றனர். அதனை வரும் தேர்வுகளில், குறைக்கக்கூடிய வகையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

கரோனா தொற்று காலத்தில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் இருந்து மாணவர்களிடையே படிக்கும் ஆர்வம் குறைந்து இருந்தது. இந்நிலையில், எளிமையான தேர்வான தமிழ் மொழித்தாளை ஆயிரக்கணக்கான மாணவர்கள் புறக்கணித்திருப்பது பல்வேறு தரப்பு மக்களிடையே கவலையினை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாயமான சென்னை மருத்துவர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.