ETV Bharat / state

'இன்ஸ்பெக்டர் என்னை டார்ச்சர் பண்றாரு' - பெண் காவலர் வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!

author img

By

Published : Dec 29, 2020, 5:20 PM IST

காவல் ஆய்வாளரால் மன அழுத்தம் ஏற்பட்டிருப்பதாக கூறி பெண் காவலர் ஒருவர் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவு காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை
சென்னை

சென்னை: காவல் ஆய்வாளர் அதிகப்படியான பணிச்சுமை கொடுப்பதால், தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர் ஒருவர், காவலர்கள் வாட்ஸ்அப் குழுவில் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவு காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த ஆடியோவில், தான் பணிபுரியும் காவல் நிலையத்தில் இருக்கும் காவல் ஆய்வாளர் தனக்கு அடிபணிய வேண்டும் என்பதற்காக தொடர்ந்து அதிகப்படியான பணி சுமை கொடுத்து வருவதாகவும், கொடுக்கும் வேலை செய்யவில்லை என்றால் வேறு எந்த காவல் நிலையத்திற்காவது பணியிடை மாற்றம் வாங்கிக்கொண்டு சென்று விடு என கூறுவதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.

பெண் காவலர் வெளியிட்ட வாட்ஸ்அப் ஆடியோ

அதிகப்படியான காவல்துறையினர் தற்கொலை செய்துகொள்வதாகவும், தானும் தற்கொலை செய்து கொள்கிறேன். அப்படி தற்கொலை செய்து கொண்டால்தான் அனைத்து பெண் காவலர்களுக்கும் விடிவுகாலம் கிடைக்கும் என கதறி அழுதுள்ளார்.

'பேசும் மன நிலையில் இல்லை'

இந்த ஆடியோ வைரலான நிலையில், சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளரை தொடர்புகொள்ள முடியவில்லை. ஆடியோ விவகாரம் குறித்து பெண் காவலரிடம் கேட்டபோது, தான் தற்போது பேசும் மன நிலையில் இல்லை என்றும், ஆனால் பேசிய ஆடியோ உண்மைதான் என வாய் மொழியாக நம்மிடம் தெரிவித்தார்.

மேலும், ஆடியோ வெளியானதும் அந்த எல்லைக்குட்பட்ட துணை ஆணையர் தன்னை தொடர்புகொண்டு பேசியதாகவும், இதுகுறித்து விசாரிப்பதாக சொன்னதாகவும் அவர் கூறினார்.

இதையும் படிங்க:குடும்பத்தை பிரிந்து களப்பணியாற்றும் பெண் காவலர்கள் வீடியோ காட்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.