ETV Bharat / state

முன்னாள் எம்எல்ஏ.,வை தாக்கிய பெண் காவல் ஆய்வாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் - தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரைத் தாக்கிய பெண் காவல் ஆய்வாளருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

state human rights commission
தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்
author img

By

Published : Mar 6, 2021, 8:03 AM IST

மாநில மனித உரிமை ஆணையத்தில், நிலக்கோட்டை இ.பி.காலனியைச் சேர்ந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ரோகினி தாக்கல் செய்த மனுவில், தேனி அல்லிநகரத்தில் திருமணம் செய்து கொடுத்துள்ள எனது மகள், குடும்ப பிரச்னையில் தாக்கப்பட்டது குறித்த புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து தெரிந்து கொள்வதற்காக, நான் 2018ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி அல்லிநகரம் காவல் நிலையம் சென்றதாகவும், அங்கிருந்த ஆய்வாளர் சண்முகலட்சுமி, என்னை தாக்கி காவல் நிலையத்தில் இருந்து வெளியே தள்ளியதுடன், என் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ததாகவும் கூறியுள்ளார்.

ஆய்வாளர் சண்முகலட்சுமி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி அவர் தாக்கல் செய்த புகார் மனுவை விசாரித்த மனித உரிமை ஆணைய உறுப்பினர் துரை ஜெயச்சந்திரன், கைது நடவடிக்கையின் போது உச்ச நீதிமன்ற நிபந்தனைகளை பின்பற்றாமல், ஆய்வாளர் சண்முகலட்சுமி மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக கூறி, அவருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

அபராத தொகையை ஒரு மாதத்தில் மனுதாரருக்கு செலுத்தும்படியும், அதை ஆய்வாளர் ஊதியத்தில் பிடித்தம் செய்து கொள்ளவும் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:பழரசம் தர மறுத்த கடைக்காரர்: காதை அறுத்த மதுப்பிரியர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.