ETV Bharat / state

முகக்கவசத்தில் தங்க பேஸ்ட் மறைத்து நூதன கடத்தல் - ஒருவர் கைது!

சென்னை : துபாயிலிருந்து முகக்கவசத்திற்குள் தங்க பேஸ்ட்டை மறைத்து கடத்தி வந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த பயணி ஒருவர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

சுங்கத்துறை அலுவலரால் கைப்பற்றப்பட்ட தங்க பேஸ்ட், எலக்ட்ரானிக் சாதனங்கள் உள்ளிட்ட பொருட்கள்

author img

By

Published : Apr 1, 2021, 9:44 PM IST

சென்னை விமான நிலையத்துக்கு துபாயிலிருந்து ஃபிளை துபாய் சிறப்பு விமானத்தின் மூலமாக புதுக்கோட்டையை சேர்ந்த முகமது அப்துல்லா(40) என்ற பயணி வந்தடைந்தார். அப்போது முகமது அப்துல்லா அணிந்திருந்த முகக்கவசம் சற்றே வித்தியாசமாக இருப்பதை சுங்கத்துறை அலுவலர்கள் கவனித்தனர்.

சந்தேகத்தின் அடிப்படையில் சுங்கத்துறை அலுவலர்கள் அவரது முகக்கவசத்தை கழற்றச் சொல்லி சோதனை நடத்தினர். அதில் 85 கிராம் தங்க பேஸ்ட் ஒட்டிக்கொண்டு வரப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும் அவருடைய உடைமைகளில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 8.13 லட்சம் மதிப்புள்ள ஐஃபோன், லேப்டாப்களும் கைப்பற்றப்பட்டன.

மொத்தமாக அவரிடமிருந்து ரூ.11.13 லட்சம் மதிப்புடைய தங்கம், எலக்ட்ரானிக் பொருட்கள் சுங்கத்துறை அலுவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையும் படிங்க: சிஏஏ, நீட் தேர்வு, வேளாண் சட்டங்களை திரும்ப பெற பிரதமரிடம் முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும்- ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.