சென்னை: G.N.அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம், 'வெள்ளைக்கார துரை', 'தங்கமகன்', 'மருது', 'ஆண்டவன் கட்டளை' உள்ளிட்ட வெற்றி படங்களைத் தொடர்ந்து, சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ஒன்றை பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறது. நகைச்சுவை கலந்த கமர்ஷியல் பிரமாண்ட படைப்பாக உருவாகும் இப்படத்தை ஆனந்த் நாராயண் இயக்குகிறார்.
இந்த படத்தில் அனைத்து இளைஞர்களும் ரசித்து கொண்டாடும் விதமாக சந்தானத்தின் கதாபாத்திரம் உருவாகி உள்ளது. மேலும், சந்தானத்தின் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் படம் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.
இப்படத்தில் சந்தானத்தின் ஜோடியாக பிரியாலயா கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார்.
முக்கிய வேடத்தில் தம்பி ராமையாவும், சுவாரஸ்யமான வேடத்தில் மனோபாலாவும் நடித்துள்ளனர். இவர்களுடன், முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா, பால சரவணன், மாறன், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
பல வெற்றி படங்களுக்கு கதை, வசனம் எழுதிய எழிச்சூர் அரவிந்தன் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.
படத்தில் D. இமானின் இசையில் மூன்று பாடல்கள் மிகச் சிறப்பாக வந்துள்ளன. பாடல் வரிகளை இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் முத்தமிழ் எழுதியுள்ளனர். மேலும், ஒளிப்பதிவு - ஓம் நாராயண், எடிட்டிங் - எம்.தியாகராஜன், கலை - எம்.சக்தி வெங்கட்ராஜ், ஸ்டண்ட் - மிராக்கிள் மைக்கேல் ஆகியோர் கவனிக்கின்றனர்.
படத்தின் பிரம்மாண்டமான பாடல் காட்சிகளுக்கு பிருந்தா மற்றும் பாபா பாஸ்கர் நடனம் அமைத்து இயக்கியுள்ளனர். சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. முழுவீச்சில் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் மற்றும் வெளியிடும் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.
இதையும் படிங்க: "மற்றொரு கொடூரமான ஞாயிறு" - சமந்தாவின் லீவுக்கு நோ சொன்ன பயிற்சியாளர்.. வைரலாகும் இன்ஸ்டா பதிவு!