ETV Bharat / state

பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை: தலைமைச் செயலர் சண்முகம் ஆலோசனை

சென்னை: தமிழ்நாட்டில் பறவைக் காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கால்நடை துறை அலுவலர்களுடன் தலைமைச் செயலர் சண்முகம் ஆலோசனை நடத்தினார்.

தலைமைச் செயலாளர் சண்முகம்
தலைமைச் செயலாளர் சண்முகம்
author img

By

Published : Jan 12, 2021, 7:46 PM IST

சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலர் க.சண்முகம் தலைமையில் தமிழ்நாட்டில் பறவைக் காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கேரளாவிலிருந்து பறவை காய்ச்சல் வேகமாக பரவிவருகிறது. தமிழ்நாட்டில் இந்த நோய் பரவல் தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழ்நாட்டில் கேரளாவை ஒட்டிய மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கேரள மாநிலத்தின் எல்லை ஓரத்தில் அமைந்துள்ள நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஆட்சியர்கள் தலைமையில் தேவையான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தமிழ்நாடு தலைமைச் செயலர் சண்முகம், மாநிலத்தில் பறவைக் காய்ச்சலை தடுப்பது குறித்தும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கால்நடைத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் கறிக்கோழி, முட்டைக்கோழி ஒருங்கிணைப்புக் குழுக்களின் நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாடு கோழி பண்ணையாளர்கள் சங்க நிர்வாகிகளிடம் மாநிலத்தில் விற்கப்படும் கறி, கோழி, முட்டைகள் ஆகியவற்றில் தொற்று ஏற்படாமல் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார்.

vதலைமைச் செயலாளர் சண்முகம்
தலைமைச் செயலாளர் சண்முகம்

இக்கூட்டத்தில், காவல்துறை தலைமை இயக்குநர் ஜெ.கே. திரிபாதி, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர். சி. பாலச்சந்திரன், கறிக்கோழி, முட்டைக்கோழி ஒருங்கிணைப்புக் குழுக்களின் நிர்வாகிகள், தமிழ்நாடு கோழி பண்ணையாளர்கள் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக, பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து பேசிய கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டில் கோழிப் பண்ணைகள் தீவிரமாக கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கண்காணிப்பு குழுக்கள் மூலம் கேரளாவில் இருந்து வாகனங்கள் மூலம் வரும் கோழிகள், கோழி இனம் சார்ந்த பொருள்கள் அனைத்தும் மாநில எல்லைக்குள் நுழையா வண்ணம் தடைசெய்து திருப்பி அனுப்பப்படுகின்றன" என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.