ETV Bharat / state

தொழில்துறை கூட்டணி சுழற்சிப் பொருளாதாரத்திற்கு அடித்தளமாக அமையும்: மத்திய அமைச்சர் - சென்னை

தொழில்துறை தலைமையிலான கூட்டணி, ஆதார வளப்பயன்பாடு மற்றும் சுழற்சிப் பொருளாதாரத்திற்கு அடித்தளமாக அமையும் என மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.

Union Minister Bhupender Yadav and G20 Environment Ministers
மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் மற்றும் g20 நாடுகளின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள்
author img

By

Published : Jul 27, 2023, 10:10 PM IST

சென்னை: நடைபெறும் ஜி20 4-வது சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை நிலைத்தன்மை பணிக்குழுவின் பக்க நிகழ்வாக ஆதார வளப் பயன்பாடு மற்றும் சுழற்சிப் பொருளாதாரத் தொழில் கூட்டணியை மத்திய வனம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் இலச்சினை (logo)வெளியிட்டு தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர், ''தொழில்நுட்ப ஒத்துழைப்பை ஊக்குவித்தல், அறிவுப்பரிமாற்றம், புதிய கண்டுபிடிப்புகளை அதிகரித்தல், நிதி வாய்ப்பை விரிவுபடுத்துவதற்கான ஆலோசனைகளின் பரிமாற்றம் ஆகியவற்றில் ஆதார வளங்கள் பயன்பாடு மற்றும் சுழற்சி பொருளாதார தொழில் துறை கூட்டணி முக்கிய பங்கு வகிக்கும். இந்தக் கூட்டணியில் இணைவதற்கு 39 நிர்வாக உறுப்பினர்கள் முன்வந்திருப்பது பாராட்டுக்குரியது.

சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை நிலைத்தன்மை பணிக்குழுவின் எட்டு முதல் ஒன்பது மாதகால முயற்சிகள் நிறைவடைந்த நிலையில் சுற்றுச்சூழல் தன்மையில் நிலையான தாக்கத்தை உருவாக்க இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்துக்கு பின்னரும் தொடரும் வகையில் இந்தக் கூட்டணி தற்சார்பு கொண்டதாக இருக்கும்.

மேலும் நிறுவனங்களுக்கு இடையேயான மகத்தான ஒத்துழைப்பை அதிகரித்தல், துறைகள் தோறுமான திறன்களை கட்டமைத்தல், கூட்டணியில் உள்ள உறுப்பு நாடுகளின் பல்வகையான, உலகளாவிய அனுபவங்களை கற்றறிதல், ஆதார வளங்களின் பயன்பாட்டை விரிவுபடுத்த தனியார் துறைக்கு கூடுதல் வாய்ப்பளித்தல், சுழற்சி பொருளாதார மாற்றத்தை அதிகரித்தல் ஆகியவை இந்தக் கூட்டணியின் செயல்பாடாக இருக்கும்.

இந்தக்கூட்டணி, தாக்கத்திற்கான கூட்டாண்மை, தொழில்நுட்ப ஒத்துழைப்பு, மேம்பாட்டுக்கான நிதி என்ற 3 வழிகாட்டு நெறிமுறைகளைக் கொண்டுள்ளது. முக்கியமான உலகளாவிய இலக்குகள், ஜி20 மற்றும் சர்வதேச அமைப்புகள் முன்வைத்துள்ள முன்னுரிமைகள் ஆகியவற்றில் முன்னேற்றம் காண்பதற்கு பங்களிப்பு செய்வதும் இந்தக் கூட்டணியின் நோக்கமாகும்.

வருடாந்திர கூட்டங்களுக்கும், ஜி20 அமைப்புடன் தங்களின் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளவும், வெற்றி தகவல்களை எடுத்துரைக்கவும் இந்தக் கூட்டணி ஜி20 ஆதார வள பயன்பாட்டுப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படும்’’ எனத் தெரிவித்தார்.

அழுத்தம் தரும் சுற்றுச்சூழல் பிரச்னைகளை விவாதிக்கவும், வலுவான எதிர்காலத்தை நோக்கிய உலகளாவிய ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இந்திய தலைமைத்துவத்தின் கீழ், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை நிலைத்தன்மை பணிக்குழு மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர்களின் கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது.

அறிவுப் பகிர்தல், செயல்திட்டங்களை வகுத்தல், நீடிக்க வல்ல எதிர்காலத்திற்கும் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கும் பயனுள்ள உத்திகளை வகுப்பதை நோக்கிய நேரடியான ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ளுதல் இந்தக் கூட்டங்களின் விவாத நோக்கமாகும்.

நான்கு நாள்கள் நடைபெறும் , சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை நிலைத்தன்மை பணிக்குழுவின் இரண்டாவது நாள் கூட்டத்தின் தொடக்கத்தில் நீராதார நிர்வாகம், பருவநிலை மாற்றம், ஆதார வளங்கள் பயன்பாடு, சுழற்சி பொருளாதாரம், நீலப்பொருளாதாரம் ஆகியவற்றின் மீது விரிவான விவாதங்கள் நடைபெற்றன. இந்நிகழ்வில் ஐரோப்பிய யூனியன், கனடா, டென்மார்க், இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட ஜி 20 நாடுகளின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: அத்திப்பட்டி போல் மாயமான 5 கிராமங்கள்.. வாக்குரிமை இருந்தும் நிர்கதியாய் நிற்கும் மக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.