ETV Bharat / state

நடுவானில் விமானத்தில் புகை பிடித்த பயணி கைது.. சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைப்பு! - Passenger arrested for smoking in flight

இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நடு வானில் பறந்து கொண்டிருந்தபோது அதில் பயணித்த பயணி சட்டத்தை மீறி விமானத்திற்குள் புகை பிடித்ததால் விமானம் சென்னையில் தரை இறங்கிய பின்னர் விமான நிலைய போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் புகைபிடித்த பயணி கைது

author img

By

Published : Aug 2, 2023, 10:15 AM IST

சென்னை: சவுதி அரேபியாவில் உள்ள தமாமிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், 164 பயணிகளுடன் சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. விமானம் நடு வானில் பறந்து கொண்டிருந்தபோது அந்த விமானத்தில் பயணம் செய்த நாகை மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்த வைத்தியநாதன் (37) என்ற பயணி, அடிக்கடி தனது இருக்கையில் இருந்து எழுந்து விமானத்தின் கழிவறைக்கு சென்று வந்துள்ளார்.

அவர் ஒவ்வொரு முறை கழிவறையை பயன்படுத்த சென்று வரும்போதும் அவரிடம் சிகரெட் புகையிலை நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து சக பயணிகள் அவரிடம் விமானத்திற்குள் புகை பிடிக்கக் கூடாது என்ற விதிமுறை உள்ளது. ஆனால் நீங்கள் விதியை மீறி தொடர்ந்து கழிவறைக்கு சென்று புகை பிடித்து வருவது சரியா? என்று கேட்டனர்.

அதற்கு அந்தப் பயணி நான் செயின் ஸ்மோக்கர். என்னால் புகை பிடிக்காமல் இருக்க முடியாது. எனவே நான் என்னுடைய உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருக்கும் சிகரெட் மற்றும் லைட்டரை விமானத்தின் கழிவறையில் தான் உபயோகப்படுத்துகிறேன். அதில் உங்களுக்கு என்ன சிரமம்? என்று கேட்டுள்ளார். ஆனால் சக பயணிகள் சிகரெட் லைட்டரை விமானத்திற்குள் உபயோகப்படுத்துவது விமானத்தில் பயணிக்கும் 164 பயணிகளுக்கும் பேராபத்தை உருவாக்கும் என்று எச்சரித்தனர்.

இதனால் சக பயணிகளுக்கும், வைத்தியநாதனுக்கும் இடையே விமானத்திற்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து விமான பணிப்பெண்கள் பயணிகளிடம் வந்து விசாரித்தனர். அப்போது சக பயணிகள் இந்தப் பயணி தொடர்ச்சியாக எழுந்து சென்று புகை பிடித்து வருவதாகக் கூறினர். இதையடுத்து விமான பணிப்பெண்கள் விமான கேப்டனுக்கு தகவல் கொடுத்தனர்.

உடனே விமான கேப்டன் சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையோடு தொடர்பு கொண்டு, பாதுகாப்பு அதிகாரிகளை தயார் நிலையில் இருக்கும்படி கேட்டுக் கொண்டார். அதன் பின்பு நேற்று இரவு (ஆகஸ்ட் 1) விமானம் சென்னையில் தரை இறங்கியதும் விமான பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்துக்குள் ஏறி விமான பாதுகாப்பு சட்டத்துக்கு முரணாக உள்ளே புகை பிடித்த பயணி வைத்தியநாதனை பிடித்து விசாரித்தனர்.

அப்போதும் அவர் நான் செயின் ஸ்மோக்கர் என்னால் புகை பிடிக்காமல் இருக்க முடியாது என்று மீண்டும் கூறியுள்ளார். இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள், பயணி வைத்தியநாதனை குடியுரிமை சோதனை, சுங்கச் சோதனை ஆகியவற்றை முடிக்கச் செய்து பாதுகாப்புடன் அழைத்துச் சென்று சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர்.

அதோடு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் முறைப்படி அந்த பயணி மீது போலீசில் புகார் செய்தது. இதையடுத்து சென்னை விமான நிலைய போலீசார் பயணி வைத்தியநாதன் மீது விமான பாதுகாப்பு சட்டத்தை மீறியது, சக பயணிகளுக்கு இடையூறு விளைவித்தது, வானில் பறந்து கொண்டிருந்த விமானத்திற்கு பேராபத்தை விளைவிக்கும் செயல் செய்தது உள்ளிட்ட சில பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

இதையும் படிங்க: Theni: விபத்தில் தீயில் கருகி உயிரிழந்த தலைமைக் காவலர்! 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.