கரோனா வைரஸ் பீதி காரணமாக மலேசியா - இந்தியா இடையே கடந்த ஒரு வாரமாக விமான சேவைகள் இல்லை. இதனால் மலேசியாவிலிருந்து இந்தியா்கள் சிலா் தாயகம் திரும்ப முடியாமல் தவித்தனா்.
இந்நிலையில் மத்திய அரசு நடவடிக்கை காரணமாக 113 இந்தியர்கள் நேற்று இரவு 11.40 மணிக்கு மலேசியா தலைநகா் கோலாலம்பூரிலிருந்து ஏா் ஏசியா தனி விமானத்தில் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனா்.
அவா்கள் அனைவருக்கும் விமான ஓடுதளத்திலேயே மருத்துவப் பரிசோதணை நடந்தது. பின்பு அங்கிருந்தே அவா்களில் 109 பேர், இந்திய விமானப்படையின் 3 சிறப்பு பஸ்களில் ஏற்றி, கிழக்கு தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படை வளாகத்தில் உள்ள சிறப்பு மருத்துவ முகாமிற்கு கொண்டுசெல்லப்பட்டனர்.
அங்கு அவா்கள் 14 நாட்கள் தொடா்ந்து தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருப்பாா்கள் என்று கூறப்பட்டுள்ளது. அந்த விமானத்தில் வந்த மேலும் 9 பேரை 2 ஆம்புலன்களில் ஏற்றி சென்னை ராஜுவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனா். இவா்களுக்கு கரோனாவுக்கான அறிகுறி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
113 போ் மலேசியாவிலிருந்து சிறப்பு தனி விமானத்தில் சென்னை அழைத்துவரப்படுவதை தெரிந்து, அவா்களுடைய குடும்பத்தினா் சிலா் அவா்களை பாா்ப்பதற்காக சென்னை சா்வதேச விமானநிலையத்திற்கு வந்திருந்தனா். ஆனால் மருத்துவ குழுவினரும், பாதுகாப்பு அலுவலர்களும் குடும்பத்தினர் சந்திக்க அனுமதிக்கவில்லை.
அவா்களை விமான ஓடுதளம் அருகிலிருந்தே IAF சிறப்பு பஸ்களில் ஏற்றி, வேறு வழியாக வெளியே அழைத்து சென்றதால் குடும்பத்தினா் அவா்களை பாா்க்க முடியவில்லை. இந்த 113 பேரும் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் என்று கூறப்படுகிறது.
அவர்களை ஏற்றிவந்த ஏா் ஏசியா விமானம் இரவு ஒரு மணிக்கு மலேசியாவிற்கு திரும்பிச் சென்றது. அதில் 184 மலேசியா்கள் அனுப்பி வைக்கப்பட்டனா். அவர்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தவித்தவர்கள்து குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழ்நாடு - கர்நாடக எல்லைப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தம்