துபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட 154 பயணிகளில் 100 ஆண்களும், 42 பெண்களும், 11 சிறார்களும், ஒரு பச்சிளங்குழந்தையும் அடங்குவர். இவா்கள் ஐக்கிய அரபு நாடுகளில் குடும்பமாக தங்கியிருந்து, தனியாா் நிறுவனங்களில் பணியாற்றியவா்கள். இந்த கரோனாவினால் ஏற்பட்ட ஊரடங்கினால், அவர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்தனர். இதனால் அங்குள்ள இந்தியத் தூதரகம் ஏற்பாடு செய்து, அவர்களை இந்தியா அனுப்பி வைத்தது.
சென்னை விமானநிலையத்தில் அனைவரையும் தமிழ்நாடு அரசு அலுவலர்கள் வரவேற்றனா். பின்பு அவா்களை தகுந்த இடைவெளிவிட்டு வரிசைப்படுத்தி, மருத்துவ பரிசோதனையோடு குடியுரிமை, சுங்கச்சோதனைகளும் நடத்தப்பட்டன. இதையடுத்து அவா்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை அலுவலர்கள் மேற்கொண்டனா்.
இதையும் படிங்க: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - முதலமைச்சர் பழனிசாமி