ETV Bharat / state

மாண்டஸ் புயலால் என்ன நடக்கும்? - வானிலை ஆய்வு மையத்தின் முழு தகவல்! - புயல்

மாண்டஸ் புயல் (mandous cyclone) நிலவரம் குறித்த முழு தகவல்களை இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Indian Meteorological Center  mandous cyclone  Balachander  Balachander give information about mandous cyclone  cyclone  மாண்டஸ் புயல்  வானிலை ஆய்வு மையத்தின் முழு தகவல்  இந்திய வானிலை ஆய்வு மையம்  வாணிலை ஆய்வு மையம்  பாலச்சந்தர்  மழை  மழை எச்சரிக்கை  மீனவர்களுக்கான எச்சரிக்கை  புயல்  mandous cyclone update
பாலச்சந்திரன்
author img

By

Published : Dec 8, 2022, 3:23 PM IST

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், 'தென்மேற்கு வங்க கடல் பகுதியில் சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 550 கி.மீ. தொலைவிலும், காரைக்காலுக்கு கிழக்கு - தென்கிழக்கே 460 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகரக்கூடும். தற்போதைய நிலவரப்படி நாளை இரவு புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு இடைப்பட்ட பகுதியில் இது கரையைக் கடக்கக்கூடும். இதன் காரணமாக 8, 9, 10ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் அநேக இடங்களில் மழை பெய்யக்கூடும்.

கனமழையினைப் பொறுத்தவரையில் 8ஆம் தேதி டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை முதல் மிக மழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.

நாளை 9ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஒரே சில இடங்கள், தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு இடங்களில் கனமழை பெய்யும். மேலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுவை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதி கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 10ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன்

காற்றைப் பொறுத்தவரை இன்று தமிழ்நாடு கடற்கரையினை ஒட்டி இருக்கக்கூடிய பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், சமயங்களில் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதேபோல, நாளை காலை முதல் மாலை வரை வட தமிழ்நாடு பகுதிகளில் சூறைக்காற்று வீசக்கூடும்.

மேலும், 9ஆம் தேதி மாலை முதல் 10ஆம் தேதி காலை வரை உள்ள காலகட்டத்தில் 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்திலும் சமயத்தில் 70 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும். அதேபோல, வட தமிழ்நாடு கடற்கரையினை ஒட்டிய தமிழ்நாடு கடலோரப் பகுதிகள், மன்னர் வளைகுடா பகுதிகளில் இன்று சூறைக்காற்று மாணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசும், சமயத்தில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நாளை 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும் சமயங்களில் 70 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

கடல் அலையைப் பொறுத்தவரை பத்தாம் தேதி வரை தமிழ்நாடு கடற்கரையினை ஒட்டி இருக்கக்கூடிய பகுதிகளில் கொந்தளிப்புடன் காணப்படும். எனவே, மீனவர்கள் பத்தாம் தேதி வரை கடலுக்குள் செல்ல வேண்டாம். சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரையிலும் அடுத்து வரும் இரு தினங்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். மேலும், தற்போதைய நிலவரப்படி புயலாகத் தான் கரையைக் கடக்கும். தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறோம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மீண்டும் வேகமெடுக்கும் மாண்டஸ் புயல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.