டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி 41 வருடங்களுக்குப் பிறகு பதக்கம் வென்றுள்ளது. இதனையடுத்து பல்வேறு தரப்பினர் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
அந்தவகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “41 வருட காத்திருப்பு முடிவுக்கு வந்திருக்கிறது. வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய ஹாக்கியில் புதிய அத்தியாயம் தொடங்கியிருக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், மக்களவை உறுப்பினர் கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், அருமையாக தொடங்கிய நாள் இது. 41 வருடங்களுக்கு பிறகு இந்திய அணி வரலாறு படைத்திருப்பதை பார்க்கையில் மனதுக்கு இதமாக இருக்கிறது” என பதிவிட்டுள்ளார்.