ETV Bharat / state

செர்பியா நாட்டின் அலெக்சாண்டர் ப்ரெட்கேவை வீழ்த்தினார் இந்திய கிராண்ட் மாஸ்டர் அர்ஜுன்..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 17, 2023, 10:28 PM IST

Grand Masters Chess Championship 2023: ‘சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்’ போட்டியின் 3 ஆவது சுற்றில் செர்பியா நாட்டின் கிராண்ட் மாஸ்டரான அலெக்சாண்டர் ப்ரெட்கே-வை இந்திய கிராண்ட் மாஸ்டர் அர்ஜுன் எரிகசி வீழ்த்தினார்.

செர்பியா நாட்டின் அலெக்சாண்டர் ப்ரெட்கேவை வீழ்த்தினார் இந்திய கிராண்ட் மாஸ்டர் அர்ஜூன்!

சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ‘சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்’ போட்டி சென்னையில் 15ஆம் தேதி தொடங்கிய நிலையில் 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் இத்தொடரின் 3வது சுற்று ஆட்டம் இன்று (டிச.17) நடைபெற்றது.

இந்த ஆட்டத்தை அமெரிக்க தூதரகத்தின் நிர்வாகி ஆன, சமந்தா ஜாக்சன் தொடக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில், 3 ஆட்டம் டிராவிலும், அர்ஜுன் எரிகைசி மற்றும் அலெக்சாண்டர் ப்ரெட்கே மோதிய ஆட்டத்தில், அர்ஜுன் வெற்றி பெற்றார்.

3வது சுற்றின் முடிவில் சனான் சுகிரோவ், ஹரிகிருஷ்ணா ஆகியோர் தலா 2 புள்ளிகளுடன் முதல் இரு இடங்களில் உள்ளனர். லெவோன் அரோனியன் , பாவெல் எல்ஜனோவ், குகேஷ், அர்ஜுன் எரிகைசி தலா 1.5 புள்ளிகள் கொண்டு அடுதெடுத்த இடங்களில் உள்ளனர். இதைத் தொடர்ந்து, அலெக்சாண்டர் ப்ரெட்கே மற்றும் பர்ஹாம் மக்சூட்லூ ஆகியோர் தலா ஒரு புள்ளியுடன் 7 மற்றும் 8 ஆவது இடத்தில் உள்ளனர்.

3வது சுற்றில், அர்ஜுன் எரிகைசி அலெக்சாண்டர் ப்ரெட்கே மோதியதில் , அர்ஜுன் எரிகைசி வெள்ளை காய்களுடன், ஆட்டத்தை தொடங்கினார். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தி, அர்ஜுன் தனது 71வது நகர்வில், அலெக்சாண்டர் ப்ரெட்கேவை தோற்றடித்தார்.

இதைத் தொடர்ந்து, குகேஷ்-பர்ஹாம் மக்சூட்லூ 30வது நகர்விலும், லெவோன் அரோனியன் - சனான் சுகிரோவ் 40வது நகர்விலும், ஹரிகிருஷ்ணா - பாவெல் எல்ஜனோவ் 34வது நகர்விலும் ஆகிய 3 ஆட்டங்கள் டிராவில் முடிந்தது.

இந்த போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர்களான அர்ஜுன் எரிகைசி, டி.குகேஷ், ஹரிகிருஷ்ணா ஆகியோருடன் சர்வதேச கிராண்ட்மாஸ்டர்களான, ஈரானின் பர்ஹாம் மக்சூட்லூ , அமெரிக்காவின் லெவோன் அரோனியன் , ஹங்கேரியின் சனான் சுகிரோவ, உக்ரைனின் பாவெல் எல்ஜனோவ் , செர்பியாவின் அலெக்சாண்டர் ப்ரெட்கே ஆகியோரும் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மேலும் இந்த தொடரானது டி.குகேஷ், அர்ஜுன் எரிகைசி ஆகியோருக்கு கேண்டிடேட்ஸ் போட்டிக்கு தகுதிபெற வாய்ப்பாக அமையும் என கருதப்படுகிறது.

இதையும் படிங்க: தென் மாவட்ட கனமழை எதிரொலி: 4 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.