சென்னை: இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரரான டி.குகேஷ் இன்று (செப்.12) தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். முதலமைச்சர் ஸ்டாலின், குகேஷுக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார்.
அப்போது, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர். அதுல்யா மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் ஜே.மேகநாத ரெட்டி, வேலம்மாள் கல்வி அறக்கட்டளை தலைவர் எம்.வி.எம்.வேல்மோகன் மற்றும் செஸ் விளையாட்டு வீரர் குகேஷ்-இன் பெற்றோர் ஆகியோர் உடனிருந்தனர்.
-
இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரர் செல்வன் டி.குகேஷ் அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். pic.twitter.com/2s1VcXQx6R
— CMOTamilNadu (@CMOTamilnadu) September 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரர் செல்வன் டி.குகேஷ் அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். pic.twitter.com/2s1VcXQx6R
— CMOTamilNadu (@CMOTamilnadu) September 12, 2023இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரர் செல்வன் டி.குகேஷ் அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். pic.twitter.com/2s1VcXQx6R
— CMOTamilNadu (@CMOTamilnadu) September 12, 2023
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த குகேஷ் பேசுகையில், “இன்று முதலமைச்சர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்நாடு அரசு சார்பில் 30 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகையை முதலமைச்சர் எனக்கு வழங்கினார். மேலும் செஸ் எலைட் டீமில் என்னை இணைத்து உள்ளனர்.
என்னுடைய பள்ளி மற்றும் தமிழ்நாடு அரசு எனக்கு உறுதுணையாக இருந்தது. இதேபோன்று அரசு தரப்பில் விளையாட்டு வீரர்களுக்கு உறுதுணையாக இருந்தால் செஸ் போட்டிகளின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்” என அவர் கூறினார்.
முதலமைச்சருடன் சென்னை மாவட்ட ஆட்சியர் சந்திப்பு: தொடர்ந்து தமிழக முதலமைச்சரை சென்னை மாவட்ட ஆட்சியராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ரஷ்மி சித்தார்த் ஜக்டே மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இதனை தொடர்ந்து தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளராக பொறுப்பேற்று கொண்ட அருண் ராய் தமிழக முதலமைச்சரை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.