கரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் வாடிக்கையாளர்கள் எளிதாக பணம் எடுக்கும் வகையில் இந்தியன் வங்கி சார்பில் நடமாடும் ஏடிஎம் சேவை தொடங்கப்பட்டது.
தலைமை செயலகத்தில் நிதித் துறை செயலாளர் கிருஷ்ணன் இந்தியன் வங்கியின் நடமாடும் ஏடிஎம் வாகனத்தைத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், இந்தியன் வங்கி தலைமை செயல் அதிகாரி பத்மஜா சுந்துரு மற்றும் இந்தியன் வங்கி மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பத்மஜா சுந்துரு தற்போது கரோனா தொற்று நோய் காரணமாக பொதுமக்கள் வீடுகளில் இருப்பதினால் இந்த நடமாடும் ஏடிஎம் வாகனம் தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.