இதுகுறித்து தணிக்கைத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசு 47 ஆயிரத்து 936 கோடி ரூபாய் கடந்த ஆண்டுகளில் வெவேறு நிதி ஆதாரங்கள் மூலம் கடனாக பெற்றுள்ளது. இதற்கு மட்டும் 24 ஆயிரத்து 310 கோடி ரூபாய் வட்டியை கடன் வாங்கியதற்காக செலுத்தியுள்ளது. மீதமுள்ள ரூ. 15 ஆயிரத்து 64 கோடியை கடன் கட்டவும், ரூ.8 ஆயிரத்து 562 கோடியை பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தியதற்காக செலவிட்டுள்ளது.
மாநிலத்தில் மொத்த நிகர கடன் கிடைப்பு குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் பொதுக்கடன் அதிக அளவில் திரும்ப செலுத்தப்பட்டிருக்கிறது. 2017-18 ஆம் ஆண்டு ரூ. 8 ஆயிரத்து 991 கோடியாக இருந்த பொதுக்கடன், 2018-19 இல் ரூ. 15 ஆயிரத்து 064 ஆக உயர்ந்துள்ளது. எனவே இது நிதிச்சுமையை ரூ. 3.26 லட்சம் கோடியிலிருந்து ரூ. 3.68 லட்சம் கோடி வரை உயந்துள்ளது
இதே போல வருவாய் பற்றாக்குறையும் அதிகரித்துள்ளது. 2014-15 ஆம் ஆண்டு இருந்த ரூ. 6 ஆயிரத்து 408 கோடி வருவாய் பற்றாக்குறை 2018-19 இல் ரூ. 23 ஆயிரத்து 459 கோடியாக அதிகரித்துள்ளது. அதாவது மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி 0.6 விழுக்காட்டிலிருந்து 1.41 விழுக்காடாக உயந்துள்ளது. இந்த வருவாய் பற்றாக்குறை அதிகரிப்பால் தமிழ்நாடு 2018-19 ம் நிதியாண்டில் அதனுடைய இலக்கான ரூ. 17 ஆயிரத்து 491 கோடியை அடைய முடியவியலை" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டம்: இந்திய கணக்காய்வு தணிக்கை