கரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் அன்றாட வேலைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைப் போக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. அதன்படி இந்திய அஞ்சல் துறை செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதில், இந்த செயலி மூலம் மக்கள் தங்களுக்குத் தேவையான மருந்துகள், முகக் கவசங்களைத் தங்கள் வீட்டிலிருந்தே பெற முடியும்.
இது குறித்து மூத்த அலுவலர் ஒருவர் கூறுகையில், ''ஊரடங்கு காரணமாக எங்கள் சேவைகளில் எந்தவிதமான வீழ்ச்சியும் ஏற்படவில்லை. எங்கள் ஊழியர்கள் இந்த மனஅழுத்த சூழ்நிலைகளிலும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். வழக்கமான சேவைகளைத் தவிர, மக்களின் வேண்டுகோளின் அடிப்படையில் அவர்களுக்கு மருந்துகள் மற்றும் முகக்கவசங்களை வழங்கி வருகிறோம். வாடிக்கையாளர்கள் தபால் சேவைகள், அஞ்சல் வங்கி, சேமிப்பு வங்கி, காப்பீடு, நிதி சேவைகள் என அனைத்து தபால் சேவைகளையும் தடையின்றிப் பெறலாம்" எனத் தெரிவித்தார்.
மேலும் அவர், "மக்களுக்குத் தேவையான முகக்கவசம், மருந்து ஆகியவற்றைப் பெற ஆண்ட்ராய்டு போன்களில் இந்திய அஞ்சல் துறை அறிமுகப்படுத்தியுள்ள புதிய செயலியின் வழியே, ஆர்டர் செய்தும் தங்களுக்குத் தேவையான மருந்துகளையும் முகக்கவசங்களையும் பயனர்கள் சிரமமின்றிப் பெறலாம்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க...'வங்கிக்கடன் செலுத்தாதவர்களுக்கு ஏன் இந்த விதி பயன்படுத்தப்பட்டது?'