கரோனா ஊரடங்கில் முழு முடக்கம் இல்லாத முதல் ஞாயிற்றுக்கிழமையான, இன்று (செப்.06) சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் விமான சேவைகளின் எண்ணிக்கை 100ஐ கடந்துவிட்டது. பயணிகளின் எண்ணிக்கையும் ஊரடங்கு காலத்தில் இதுவரை இல்லாத அளவு அதிகரித்துள்ளது.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து இன்று 51 விமானங்கள் வெளிமாவட்டங்களுக்கு புறப்பட்டுச் செல்கின்றன. அந்த விமானங்களில் பயணிக்க சுமாா் 5 ஆயிரம் போ் முன்பதிவு செய்துள்ளனா். அதேபோல் உள்நாட்டு முணையத்திற்கு இன்று வரும் 51 விமானங்களில், சுமாா் 7 ஆயிரம் போ் பயணிக்க முன்பதிவு செய்துள்ளனா்.
இன்று ஒரே நாளில் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் 102 விமானங்களில் சுமாா் 12 ஆயிரம் போ் பயணிக்கின்றனா். ஊரடங்கு காலத்தில் இன்றுதான் மிக அதிகமான விமானங்களும், பயணிகளும் பயணிக்கின்றனா். அதோடு சென்னை உள்நாட்டு முனையத்திலிருந்து இன்று புதிதாக ஜெய்ப்பூா், பாட்னா, ஜொத்பூா், ஹுப்ளி ஆகிய இடங்களுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
அதேபோல் சென்னையிலிருந்து டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு, விசாகப்பட்டிணம் உள்ளிட்ட நகரங்களுக்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். சென்னை விமான நிலையம் பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வெறிச்சோடி காணப்படும்.
ஆனால் இன்று வழக்கத்திற்கு மாறாக பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக விமான நிலைய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:கல்விக்காக பல மைல் தாண்டி பயணம் - நெட்வொர்க் தேடி மாணவர்கள் அலையும் பரிதாபம்!