ETV Bharat / state

கரோனா: மேலும் 1949 பேருக்கு பாதிப்பு

author img

By

Published : Aug 4, 2021, 9:05 PM IST

தமிழ்நாட்டில் இன்று 1,949 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு
கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு

சென்னை: சுகாதாரத் துறை இன்று (ஆக.4) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாட்டில் நேற்று கரோனா பாதிப்பு 1,908 ஆக பதிவாகி இருந்தது. இந்நிலையில் இன்று 1,949ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 25,67,401ஆக உயர்ந்துள்ளது.

கரோனா தொற்று பாதிப்பில் இருந்து இன்று குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 2,011ஆக உள்ளது. இதன் மூலம் மொத்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,13,087ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்று பாதிப்பால் இன்று 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34,197ஆக அதிகரித்துள்ளது.

கரோனா பாதிப்பைக் கண்டறிய 1 லட்சத்து 56 ஆயிரத்து 635 மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தமாக 3,80,52,335 மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன.

சென்னையில் இன்று 189 கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்றுடன் சிகிச்சை உள்ளவர்கள் எண்ணிக்கை 20,117 ஆக உள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மூடப்பட்டு இருக்கும் கடைகளை உடனடியாக திறக்க வேண்டும் - விக்கிரமராஜா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.