ETV Bharat / state

தமிழ்நாடு முழுவதும் இரண்டு ஒப்பந்ததாரர்கள் தொடர்பாக 45-க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு - Tamil Nadu

கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நண்பர் சந்திரசேகர் மற்றும் விருதுநகரில் ஒப்பந்ததாரர் செய்யாத்துரை ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரி சோதனை நடைபெறுகிறது.

தமிழ்நாடு முழுவதும் இரண்டு ஒப்பந்ததாரர்கள் தொடர்பாக வருமான வரித்துறையினர் சோதனை

author img

By

Published : Jul 6, 2022, 10:47 PM IST

சென்னை: அருப்புக்கோட்டையை தலைமையிடமாக வைத்து எஸ்.பி.கே கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ராமநாதபுரம், கமுதி தாலுகாவில் உள்ள கீழமுடி மன்னார் கோட்டையைச் சேர்ந்தவர் எஸ்.பி.கே நிறுவனத்தின் உரிமையாளர் செய்யாதுரை. இவருக்கு, ஈஸ்வரன், நாகராஜன், பாலசுப்பிரமணியன், கருப்பசாமி ஆகிய நான்கு மகன்கள் உள்ளனர்.

இந்த நிறுவனத்தின் மீது வருமான வரி ஏய்ப்பு புகார் வந்ததையடுத்து, அருப்புக்கோட்டையில் உள்ள தலைமை அலுவலகம், ராமநாதபுரத்தில் உள்ள உரிமையாளர் வீடு, சென்னை தி.நகரில் உள்ள அலுவலகம், நாகராஜன் வீடு, உறவினர் தீபக் வீடு உட்பட 12-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறையினர் காலை முதல் சோதனையை தொடங்கினர். சோதனையில், 50-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமானவரும், நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளருமான சந்திரசேகருக்கு தொடர்புடைய, 7-க்கும் மேற்பட்ட இடங்களில் சென்னையில், வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் எஸ்.பி.கே., நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக புகார் வந்தது.

அதன் அடிப்படையில், சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் 12 இடங்களுக்கு மேல் வருமான வரி சோதனை நடைபெற்றது. இதேபோல, நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளருமான சந்திரசேகருக்கு தொடர்புடைய 25-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. மொத்தம், தமிழ்நாட்டில் 45-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்து வருகிறது.

இருவேறு இடங்களில் தனித்தனி குழுக்களாக வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில் வரி ஏய்ப்பு தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளதாக தெரியவந்துள்ளது. அதேபோல எஸ்பிகே நிறுவனத்திற்கும் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கும் வேறு ஏதும் தொடர்பு இருக்கிறதா என்கிற அடிப்படையிலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலி: அதிமுக பொதுக்குழு ஏற்பாடுகள் தீவிரம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.