ETV Bharat / state

சென்னையில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை, லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை! - சென்னை

முன்னாள் அமைச்சர் காமராஜின் நிறுவனங்களுக்கும், ஒப்பந்ததாரர் செய்யாதுரை நிறுவனங்களுக்கும் கணக்கு வழக்குகள் பார்த்தது ஒரே ஆடிட்டர் என்பது தெரியவந்துள்ளது.

முன்னாள் அமைச்சர் காமராஜ் அலுவலகத்தில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை

author img

By

Published : Jul 8, 2022, 2:00 PM IST

சென்னை: ராமநாதபுரத்தைச் சேர்ந்த அரசு நெடுஞ்சாலை ஒப்பந்ததாரரான செய்யாத்துறை தனது எஸ்.பி.கே நிறுவனத்தின் வாயிலாக பெருமளவில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கூறி அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 3 நாட்களாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் செய்யாத்துரையின் நிறுவன கணக்கு வழக்குகளை கவனிக்கும் ஆடிட்டரின் நிறுவனமான மைலாப்பூரில் உள்ள ஜி.பி.ஏ கன்சல்டன்சி அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த நிறுவனம் வெளிநாட்டு முதலீடுகளை கவனிக்கும் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று காலை முதல் முன்னாள் அமைச்சர் காமராஜ்க்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வரும் வேளையில், ஒரு பகுதியாக ஜி.பி.ஏ கன்சல்டன்சி அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் செய்யாதுரை வரி ஏய்ப்பு வழக்கு தொடர்பாக வருமானவரித்துறை அலுவலர்கள் மூன்றாவது நாளாக சோதனைக்காக அதே அலுவலகத்திற்கு வந்ததால் குழப்பம் ஏற்பட்டது. இதன் மூலம் அரசு ஒப்பந்ததாரரான செய்யாதுரையின் நிறுவனங்களுக்கும், முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ்க்கு சொந்தமான நிறுவனங்களுக்கும் இந்த ஜிபிஏ கன்சல்டன்சி நிறுவனம் தான் கணக்கு வழக்குகளை கவனித்து வருவது தெரியவந்துள்ளது. ஒரே நேரத்தில் வருமான வரித்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்கள் சோதனை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: சென்னையில் தீவிரமாக பரவும் கரோனா...தனியார் மருத்துவமனை ஆய்வில் 111 பேருக்கு தொற்று உறுதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.