ETV Bharat / state

அரசு ஆவணங்களில் தாய் பெயரை சேர்க்க கோரிய வழக்கு- அரசு பதிலளிக்க உத்தரவு

அரசு துறைகளில் அனைத்து ஆவணங்களிலும் தாயின் பெயரை குறிப்பிடும் வகையில் தனி பிரிவை ஏற்படுத்தக்கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author img

By

Published : Sep 6, 2021, 2:06 PM IST

Include mother’s name instead father’s name all certificates, notice issued MHC
அரசு ஆவணங்களில் தாய் பெயரை சேர்க்க கோரிய வழக்கு- அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை: திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நலவழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "பூப்புனித நீராட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் அழைப்பிதழ்களில் தாய், தந்தையின் பெயரை குறிப்பிடும் நிலையில் அரசு ஆவணங்கள், வங்கி ஆவணங்கள், இருப்பிட சான்று, சாதி சான்று, வருமான சான்று, பூர்வீக சான்று பெறுவதற்கான விண்ணப்பங்களில் தந்தை பெயர் மட்டுமே குறிப்பிடப்படுகிறது.

இந்திய அரசியல் சட்டம் ஆண், பெண் இருபாலருக்கும் சம உரிமை வழங்கியுள்ள நிலையில், பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களில் தாயாரின் பெயர்கள் கேட்கப்படவில்லை.

திருமணம் ஆகாத, கணவனை இழந்த பெண்கள், செயற்கை முறையில் குழந்தைகள் பெற்றுக் கொள்ளும்போது தந்தை குறித்த விவரங்களை கோர முடியாது. நாட்டை தாய்நாடு; மொழியை தாய்மொழி; நதியை பெண்களில் பெயரில் அழைக்கும் சூழலில் அனைத்து அரசு துறை ஆவணங்களில், சான்றிதழ்களில் தாய் பெயரை குறிப்பிடும் வகையில் உரிய திருத்தம் கொண்டு வர வேண்டும்" என கோரியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஆறு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: கோயில்கள் முன்பு வைக்கும் விநாயகர் சிலைகளை கரைக்க நடவடிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.