ETV Bharat / state

ஆன்லைன் நுழைவு தேர்வு மூலம் வெளிநாடுகளுக்குச் சென்று மருத்துவம் படிக்கலாம்! - ஆன்லைன் மருத்துவ வகுப்பு தொடங்கி வைத்த எஸ் வி சேகர்

சென்னை: வெளிநாடுகளுக்குச் சென்று மருத்துவம் படிப்பதற்குத் தேவையான நுழைவுத் தேர்வு பயிற்சிகளை ஆன்லைன் மூலம் பெற பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனை ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம், நடிகர் எஸ். வி. சேகர் தொடங்கிவைத்தனர்.

Pre medcal online classes by actor SV Shekar

author img

By

Published : Jul 24, 2020, 4:38 PM IST

வெளிநாடுகளுக்குச் சென்று மருத்துவம் படிப்பதற்குத் தேவையான நுழைவுத் தேர்வு பயிற்சிகளை ஆன்லைன் மூலம் பயில பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள டாவோ மருத்துவப் பள்ளி அறக்கட்டளையின் சார்பில் தொடங்கப்படும் இந்தப் பயிற்சி பள்ளியை ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம், நடிகரும் இயக்குநருமான எஸ்.வி. சேகர் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

டாவோ அறக்கட்டளையில் தற்போது 5,000 மாணவர்கள் படிக்கின்றனர். சுமார் 2,800 மாணவர்கள் கல்லூரியில் பட்டம் பெற்றுள்ளனர். இதில் பல மாணவர்கள் உலகம் முழுவதும் பணியாற்றிவருகின்றனர்.

Pre medcal online classes by actor SV Shekar
ஆன்லைன் வகுப்புகள்

இதுகுறித்து டாவோ தலைமை நிர்வாக அலுவலர் டாக்டர் டேவிட் கே பிள்ளை பேசுகையில், குற்றச் சம்பவங்கள் அதிகம் நடைபெறாத, அதிகம் ஆங்கிலம் பேசக்கூடிய மக்கள் வசிக்கும் சிறந்த வெப்பமண்டல சூழலைக்கொண்ட பிலிப்பைன்ஸில் உள்ள மிகச்சிறந்த மருத்துவப் பள்ளிகளில் டாவோ மருத்துவப் பள்ளி அறக்கட்டளையும் ஒன்றாகும். இங்கு பல நாடுகளில் உள்ள நோய்களைக் குறித்து மாணவர்கள் கற்றுக்கொள்கின்றனர்.

ஆன்லைன் வகுப்புகளை தொடங்கிவைத்த எஸ்.வி. சேகர்

இன்டர்நேஷனல் ப்ரீ மெட் இணையதள வகுப்புகள் மாணவர்களால் மிகவும் வரவேற்கத்தக்கவையாக மாறியுள்ளன. இந்தக் கடினமான கரோனா தொற்று பரவல் காலத்தில் மாணவர்களுக்கு ஒரு சிறந்த கற்றல் தளமாக இது இருக்கும்.

இதையடுத்து எஸ்.வி. சேகர் பேசுகையில், “ரூ. 18 லட்சத்தில் முழுமையான வெளிநாட்டு மருத்துவக் கல்வியை டாவோ மருத்துவப்பள்ளி வழங்குவது பாராட்டிற்குரியது. கரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதில் உள்ள அறிவியல் பூர்வமான கருத்தை பாமரனும் புரிந்துகொள்ளும் வகையில் அரசு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.

பிலிப்பைன்ஸில் ஆங்கில மொழியிலான மருத்துவக் கல்விமுறை பலருக்கும் உபயோகமானதாக உள்ளது” என்றார்.

முன்னாள் நீதிபதி வள்ளிநாயகம் பேசுகையில், "வெளிநாட்டு மருத்துவக் கல்வியில் சிறப்பான பங்களிப்பை டாவோ மருத்துவப்பள்ளி வழங்கிவருகிறது. டாவோ மருத்துவப்பள்ளி மிகக் குறைந்த கட்டணத்தில் மாணவர்களுக்கு சிறந்த கல்வியையும், லட்சியங்களையும் நிறைவேற்ற உதவுகிறது.

மேலும் இந்தத் திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு மலிவு விலையில் கல்வியை வழங்கி வருவது பாராட்டத்தக்கது” என்றார்.

இதையும் படிங்க...ரஜினி ஒன்றும் இல்லாததை கூறவில்லை - எஸ்.வி. சேகர்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.