ETV Bharat / state

இன்று முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ்! - விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ்

சென்னை : விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் இன்று (ஆக. 17) முதல் கணினி வாயிலாக இ-பாஸ் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

in today e-pass for who were all applying in tamilnadu

author img

By

Published : Aug 17, 2020, 2:35 PM IST

Updated : Aug 17, 2020, 2:47 PM IST

நாடு முழுவதும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில், ஆகஸ்ட் மாதம் முதல் இ-பாஸ் இன்றி மக்கள் அனைவரும் பயணம் மேற்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

இருப்பினும், தமிழ்நாட்டில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பிற மாநிலங்களிலிருந்து தமிழ்நாடு திரும்புவோர்களுக்கும், ஒரு மாவட்டத்திலிருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்வோருக்கும் இ-பாஸ் நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் பயணிக்க (மாவட்டங்களுக்கு இடையே) ஆதார் அல்லது குடும்ப அட்டை விவரங்கள், தொலைபேசி/அலைபேசி எண்ணுடன் விண்ணப்பித்தால், எவ்வித தாமதமும் தடையுமின்றி உடனுக்குடன், விண்ணப்பித்த அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என கடந்த 14ஆம் தேதி தமிழ்நாடு அரசு தெரிவித்தது.

அதைத் தொடர்ந்து சென்னைக்கு திரும்புவதற்காக இ-பாஸ் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இன்று முதல் கணினி வாயிலாக இ-பாஸ் வழங்கும் பணி தொடங்கியதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் "இன்று முதல் மாவட்டங்களுக்குள் பயணம் செய்வதற்கு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும். அதேபோல் பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வர விண்ணப்பிக்கும் அனைவருக்கும் கணினி வாயிலாக இ-பாஸ் வழங்கும் பணியும் தொடங்கியுள்ளது.

இது குடிமக்களுக்கு பெரிய ஆறுதலாக இருக்கும். இந்த வசதியை சரியான நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்" எனத் தெரிவித்தார்.

Last Updated : Aug 17, 2020, 2:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.