ETV Bharat / state

டெல்லி வன்முறையில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்: சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்! - In Delhi Voilence

சென்னை: டெல்லியில் பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து சென்னை பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

டெல்லி வன்முறையில் பத்திரிக்கையாளர் தாக்கப்பட்டதற்கு கண்டம் தெரிவித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்!

author img

By

Published : Feb 25, 2020, 9:30 PM IST

டெல்லியில் பல்வேறு பகுதிகளில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவருகின்றது. இதில் நேற்று முதல் வன்முறை வெடித்தது. அதில் இதுவரை ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று ஆர்ப்பாட்ட செய்தியை சேகரிக்கச் சென்ற மூன்று பத்திரிகையாளர்களை அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியுள்ளனர். பத்திரிகையாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலைக் கண்டிக்கும்விதத்தில் சென்னை பத்திரிகையாளர்கள் மன்றத்தில் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல்லி வன்முறையில் பத்திரிகையாளர் தாக்கப்பட்டதற்கு கண்டம் தெரிவித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்!

இது தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் இணைச் செயலாளர் பாரதி தமிழன் கூறுகையில், “செய்தியாளர்கள் சாதி, மதம் பார்த்து பணிகள் செய்வது இல்லை. செய்தியாளர்கள் மீது நடந்துள்ள இத்தகையத் தாக்குதல் முதல் முறை அல்ல; இதுபோன்று மீண்டும் தொடராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் பாதிக்கப்பட்ட செய்தியாளர்களில் ஒருவர் தமிழர் என்பதால் தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக மத்திய அரசிடம் பேசி உரிய மருத்துவ சிகிச்சை வழங்கிட வழிவகுத்திட வேண்டும்” எனக் கோரிக்கைவைத்தனர்.

இதையும் படிங்க...இந்தியாவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்: முக்கிய நிகழ்வுகள் உடனுக்குடன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.