சென்னையில் கரோனா வைரஸ் தொற்றினால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. குறிப்பாக சென்னையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே சென்றுள்ளது.
இதில் அண்ணா நகரில் துணை ஆணையராக பணிபுரிந்து வந்த ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று குணமாகி வீடு திரும்பியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து இன்று சென்னையில் கூடுதல் ஆணையராக பணிபுரிந்து வரும் ஐபிஎஸ் அலுவலர் ஒருவருக்கு, தி.நகரில் துணை ஆணையராக பணிபுரிந்து வரும் ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் சென்னையில் இன்று ஒரே நாளில் இரண்டு காவல் உயர் அலுவலர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
இதையும் படிங்க...சிறுமி ஜெயஸ்ரீ எரித்து கொலை: அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்!