கரோனா வைரஸ் எதிரொலியால் நாடு முழுவதும் வரும் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்கள் அத்தியாவசியப் பொருள்களை வாங்க சமூக விலகல் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்படி பின்பற்றாத கடைகளை அரசு அலுவலர்கள் சீல் வைத்துவருகின்றனர்.
அந்த வகையில் சென்னை ஆவடியை அடுத்த பட்டாபிராமில் செயல்பட்டு வந்த மாநகராட்சிக்குச் சொந்தமான மீன் மார்கெட்டில், நோய் தொற்று ஏற்படும் விதமாக பொதுமக்கள் அதிக அளவில் சமூக விலகலை பின்பற்றப்படாமல் மீன் வாங்க குவிந்தனர். இதனால் நோய் தொற்று ஏற்பட அதிக சாத்தியங்கள் இருப்பதால் வியாபாரிகள், வாடிக்கையாளர்கள் என அனைவரையும் வெளியேற்றிவிட்டு பூட்டு போட்டு அலுவலர்கள் மூடினர்.
இந்த மார்கெட் மிகவும் குறுகிய வழி என்பதால் சமுக விலகல் கடைப்பிடிக்க முடியாததால், ஏப்ரல் 14 வரை மார்கெட்டைத் திறக்கத் தடை விதித்து, ஆவடி மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், “இதனை நம்பி பல லட்சம் மதிப்பிலான டன் கணக்கில் மீன்கள் வாங்கியதாவும், தற்போது தொழிலில் போட்ட முதல் தொகையை எடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க...தமிழ்நாட்டில் மேலும் 110 பேருக்கு கரோனா வைரஸ்!