ETV Bharat / state

திமுக அலுவலகத்தில் பாதுகாப்பு குறைபாடா? போலி அட்டையுடன் முதல்வரை நெருங்கிய நபரால் பரபரப்பு! - போலி அடையாள அட்டை

போலி அடையாள அட்டையுடன், அனுமதியின்றி முதலமைச்சரை நெருங்க முற்பட்ட சிறைத்துறை காவல் அதிகாரி கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.

சிறைத்துறை அதிகாரிக்கு சிறை; முதலமைச்சரை நெருங்கியதால் நடவடிக்கை

author img

By

Published : Dec 1, 2022, 12:47 PM IST

சென்னை: அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் மாளிகையில் புதிதாக பதவிகள் வழங்கப்பட்ட நிர்வாகிகள் முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சஃபாரி உடையில் மேடையில் ஏற முற்பட்ட ஒருவரை அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் யார் எனக் கேட்டபோது சிறைத்துறை அதிகாரி என தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அந்த நபரை அங்கு பணியில் இருந்த தேனாம்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். தேனாம்பேட்டை போலீசார் அவரிடம் சோதனை செய்தபோது தமிழ்நாடு காவல்துறையின் போலியான அடையாள அட்டையை அவர் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சந்தேகமடைந்த போலீசார் அந்த நபரையும், அவருடன் வந்தவரையும் தேனாம்பேட்டை காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த வசந்தகுமார் (42) என்பதும், அவர் பொள்ளாச்சி கிளைச் சிறையில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

மேலும், நேற்று விடுமுறை என்பதால் வசந்தகுமார் தனது நண்பர் நாட்ராயன் என்பவருடன் கோவையில் இருந்து 6.15 மணிக்கு கிளம்பி சென்னைக்கு விமானம் மூலம் 8.30 மணிக்கு வந்துள்ளார். பின்னர் திமுக மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சரை அவரது வீட்டில் சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதாக விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து அண்ணா அறிவாலயத்திற்கு முதல்வர் வருவதை அறிந்து அங்கு வசந்தகுமார் தனது நண்பருடன் வந்து, நண்பர் நாட்ராயனை வெளியே நிற்கச் சொல்லிவிட்டு முதல்வரை நெருங்க முற்பட்டபோது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் சிக்கியதும் விசாரணையில் தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு காவல்துறையின் போலியான அடையாள அட்டை வைத்திருந்த சிறைத்துறை அதிகாரியான வசந்த குமார் மீது தேனாம்பேட்டை போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் காவல்நிலைய ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.

இதையும் படிங்க: எம்ஜிஆரின் நினைவலைகளை பகிர்ந்த முதலமைச்சர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.