ETV Bharat / state

தமிழ்நாடு பட்ஜெட் 2020: பல்வேறு துறைகளுக்கான முக்கிய அறிவிப்புகள்! - தமிழ்நாடு பட்ஜெட் 2020

சென்னை: இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட்டில் வெளியான பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி, புதிய திட்டங்கள் ஆகியவை குறித்து காண்போம்...

Important announcement of tamilnadu budget 2020

author img

By

Published : Feb 14, 2020, 6:45 PM IST

2020-21ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

அவ்வாறு வெளியான அறிவிப்புகள் பின்வருமாறு:

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன்

  • ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் கல்வித் திட்டங்களுக்காக 2,018.24 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்
  • ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் பெண் கல்வி சிறப்பு ஊக்கத்தொகைத் திட்டம் 49.50 கோடியில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்
  • 2020-21இல் 15 ஆதி திராவிடர் விடுதிகள் 16.30 கோடி ரூபாயில் கல்லூரி விடுதிகளாக தரம் உயர்த்தப்படும்
  • ஆதி திராவிடர் நலப்பள்ளிகளின் உள்கட்டமைப்பு 106.29 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும்
  • ஆதி திராவிடர் குடியிருப்புகளை மேம்படுத்த 100 கோடி ரூபாயிலான சிறப்புத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன்

  • 2020-21ஆம் நிதியாண்டில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலனுக்காக 1,034.02 கோடி ரூபாய் ஒதுக்கீடு

சிறுபான்மையினர் நலன்

  • கிறித்துவ தேவாலயங்களின் பழுது பார்ப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக வழங்கப்படும் நிதி ரூ.1 கோடியிலிருந்து ரூ.5 கோடியாக உயர்த்தப்படும்
  • மசூதிகளின் பராமரிப்புப் பணிகளுக்கான நிதி ரூ.60 லட்சத்திலிருந்து ரூ.5 கோடியாக உயர்த்தப்படும். மேலும், வக்ஃபு வாரியத்திற்கு வழங்கப்படும் வருடாந்திர நிர்வாக மானியம் 2.50 கோடி ரூபாயாக உயர்த்தப்படும்

மாற்றுத்திறனாளிகள் நலன்

  • அரசு வேலைவாய்ப்புகளில் நிரப்பப்படாமல் உள்ள காலிப் பணியிடங்களை 4 சதவீத இடஒதுக்கீட்டின்படி மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில் சிறப்பு ஆள்சேர்ப்புப் பணிகள் நடத்தப்படும்
  • அறிவுசார் குறைபாடுகள் உள்ளோர், தொழு நோயாளிகள், தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோருக்கு மாதந்தோறும் வழங்கப்படும் 1,500 ரூபாய் பராமரிப்பு மானியத்தொகை, இனி முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டோர், பார்க்கின்சன் நோய், நாள்பட்ட நரம்பியல் பாதிப்புக்கு உள்ளானோருக்கும் சேர்த்து வழங்கப்படும்
  • 2020-21இல் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ஒதுக்கப்பட்ட மொத்த நிதி 667.08 கோடி ரூபாய்

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு

  • அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டத்திற்காக கூடுதல் விளையாட்டு உபகரணங்கள் வழங்குவதற்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தவும் 45 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்
  • தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கக்கூடிய உயரிய செயல் திறன் மையம் உருவாக்கப்படும்
  • 2020-21இல் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்காக மொத்தமாக 218.66 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்

ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்பு

  • ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்பு முறை, 2020ஆம் ஆண்டு ஜனவரி முதல் கரூர் மாவட்டத்தில் தனி அமைப்பு முறையாகச் செயல்பட தொடங்கியுள்ளது. 2020 மே மாதத்திற்குள் மாநிலம் முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்படும்

இதையும் படிங்க: 'பத்தாவது பட்ஜெட் பத்தாத பட்ஜெட்' - ஸ்டாலின் விமர்சனம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.