ETV Bharat / state

’ரூ.1,282 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகள் மீட்பு’: அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் - அசையா சொத்துகள் மீட்பு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து 1,282 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம், மனை, கட்டடம் மீட்கப்பட்டுள்ளதாக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Minister Sevoor Ramachandran  அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்  அசையா சொத்துகள் மீட்பு  சென்னை மாவட்ட செய்திகள்

author img

By

Published : Feb 2, 2021, 11:07 PM IST

சென்னையை இரண்டு மண்டலமாக பிரித்து இந்து அறநிலையத் துறை உருவாக்கப்பட்டது. அதில் மண்டலம் ஒன்றுக்கு 12 தாலுகா வீதம் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கான புதிய இணை ஆணையர் அலுவலகத்தை பாடியில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் திறந்துவைத்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ’தமிழ்நாடு அரசு திருக்கோயில் மற்றும் பக்தர்கள் வளர்ச்சிக்காக புதிய ஆணையர் அலுவலகம் உருவாக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ஏற்கனவே 11 இணை ஆணையர் உள்ள நிலையில் 9 புதிய இணை ஆணையர் அலுவலகம் உருவாக்கப்படவுள்ளது. அதில் சென்னையில் இரண்டு இணை ஆணையர் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ஈரோடு, கடலூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் புதிய மண்டல அலுவலகம் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த 4 ஆண்டுகளில் 1998 ஏக்கர் நிலங்கள் மீட்பு, 296 மனைகள் மீட்பு, 181 கிரவுண்ட் கட்டடங்கள் தனியாரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன. ஒட்டு மொத்தமாக 1282 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம், மனை, கட்டடம் மீட்கப்பட்டுள்ளது’ என்றார்.

இணை ஆணையர் அலுவலகம் திறப்பு விழாவில் அமைச்சர் கே.பாண்டியராஜன், எம்எல்ஏ அலெக்ஸாண்டர், இந்து அறநிலையத்துறை ஆணையர் பிரபாகர், இணை ஆணையர் ஹரி பிரியா உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:'அரசியலில் லாலி பாப் பேபி ஸ்டாலின் தான்' - அமைச்சர் ஜெயகுமார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.