ETV Bharat / state

இந்த தீபாவளி மழையோடு தான் போல.. வெதர் ரிப்போர்ட் சொல்வது என்ன..?

Tamil Nadu Weather Report: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையைத் தொடர்ந்து தற்போது மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், குமரிக்கடல் பகுதிகளில் மேலும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் 14ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

குமரிக்கடல் பகுதிகளில் புதிதாக வளிமண்டல கீழடுக்கு சுழற்சி

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 8, 2023, 4:41 PM IST

Updated : Nov 8, 2023, 7:40 PM IST

சென்னை: வடகிழக்கு பருவமழையைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து, அதே பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிழக்கக்கூடும். குமரிக்கடல் பகுதிகளில் மேலும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதனால் தமிழகத்தில் நாளை(நவ.09) வரை கன மழை தொடரும். அதைத் தொடர்ந்து நவ.14 ஆம் தேதி வரை தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புகள் இருக்கிறது. குறிப்பாக தென் மாவட்ங்களில் கணிசமான மழைப்பொழிவு இருந்து வருகிறது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் அடுத்து வரும் நாட்களில் லேசனாது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இன்று(நவ.8) கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

கனமழைக்கு வாய்ப்புள்ள இடங்கள்: நவம்பர் 9 ஆம் தேதியைப் பொறுத்தவரையில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதேப்போல், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து நவம்பர் 10 ஆம் தேதியை பொறுத்தவரையில் தமிழகம், புதுவை, காரக்கால் ஆகிய பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கும், லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தொடர்ந்து வரும் நாட்களில் அநேக இடங்களில் முதல், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

சென்னை நிலவரம்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: நாளை(நவ.8) மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று மண்டல வானிலை ஆய்வு மையம் சார்பில் அறிவுறுத்த படுகிறார்கள்" என மீன்வர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேர மழை நிலவரம்: தமிழகத்தில் கடந்த 24- மணி நேரத்தில் 11.0 மீமீ மழைப்பதிவாகியுள்ளது. இதில் நவம்பர் மாதத்தில் இயல்பை விட 28% கூடுதலாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் அதிகபட்சமாக, திருப்பூண்டி (நாகப்பட்டினம்), பெரியநாயக்கன்பாளையத்தில் (கோயம்புத்தூர்) தலா 9 செ.மீ மழை பதிவாகி உள்ளது. திருப்பூண்டி (நாகப்பட்டினம்), பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்) தலா 9செ.மீ மழையும், RSCL-2 கெடார் (விழுப்புரம்) 8செ.மீ மழையும், நீடாமங்கலம் (திருவாரூர்), கோடிவேரி (ஈரோடு), பாலக்கோடு (தருமபுரி), வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்) தலா 7செ.மீ மழையும்,

கோடியக்கரை (மயிலாடுதுறை), ஏற்காடு (சேலம்), அம்மாபேட்டை (ஈரோடு), வரட்டுப்பள்ளம் (ஈரோடு), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்) தலா 6செ.மீ மழையும், கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), மயிலாடுதுறை, திருவாரூர், கொத்தவாச்சேரி (கடலூர்), தொண்டாமுத்தூர் (கோயம்புத்தூர்), மோகனூர் (நாமக்கல்), திருக்குவளை (நாகப்பட்டினம்), நன்னிலம் (திருவாரூர்), காமாட்சிபுரம் (திண்டுக்கல்), RSCL-2 சூரப்பட்டு (விழுப்புரம்) தலா 5செ.மீ மழையும்,

கோவை, திருச்சி, மதுரை, சேலம், காரைக்கால், கள்ளக்குறிச்சி, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், தேனி, மயிலாடுதுறை, நீலகிரி, சிவகங்கை, கடலூர், ராணிப்பேட்டை ஈரோடு, தென்காசி, செங்கல்பட்டு, தஞ்சை, திருவாரூர், திருபத்தூர், தர்பமபுரி, அரியலூர், ஆகிய மாவடங்களில் 4.செ.மீ. முதல். 1.செ.மீ வரை மழைப்பதிவாகி உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் அக்டோபர் மாதத்தில் இருந்து நவம்பர் 8-ஆம் தேதி வரை தமிழகத்தில் 187.00 மி.மீ மழைப் பதிவாகி உள்ளது. இந்த மழை அளவு, இயல்பை விட 21 சதவீதம் குறைவான அளவு. மேலும், இன்றைய காலகட்டத்தில் இயல்பாக 236.மீ.மீ மழை அளவு இருந்திருக்க வேண்டும். ஆனால், இன்றைய தேதியில்(நவ.8) 8.6 மி.மீ பதிவை இயல்பான அளவாக கணக்கிடப்பட்டிருப்பதால், தற்போது பதிவாகியுள்ள மழைப்பதிவு 11 மி.மீ., அளவைக்கடந்து 28 சதவீதம் அதிகாமக மழைப்பதிவு கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகி உள்ளது.

இதையும் படிங்க: காற்று தரக் குறியீடு என்றால் என்ன? - டெல்லியில் ஏற்பட்டிருக்கும் காற்று மாசுபாடு எந்த வகையில் உள்ளது?

Last Updated : Nov 8, 2023, 7:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.