சென்னை: தமிழகத்தில் பருவமழையானது, தற்போது பரவலாக பெய்து வருகிறது. அக்டோபர் மாதத்தை விட தற்போது நவம்பர் மாதத்தில் மழையானது பரவலாக பெய்து வருகிறது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (நவ.3) வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'தமிழகத்தின் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 3 தினங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இதனால், அடுத்த முன்று தினங்களுக்கு தமிழகத்தில், இதன் காரணமாக, அடுத்த 3 தினங்களுக்கு தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதியில், லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
கனமழையை பொருத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, திண்டுக்கல், தேனி, மாவட்டங்களில், கனமழை முதல் மிக கனமழைக்கும், விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது. என்றார். சென்னை மற்றும் புறநகரில் லேசனா மழை பெய்யும், அவ்வேப்போது பலத்த மழை இருக்கக்கூடும்.
வானிலை நிலவரத்தை சிவப்பு, மஞ்சள், பச்சை, ஆரஞ்சு என நான்கு நிறங்கள் மூலம் வானிலை ஆய்வு மையம் உணர்த்துகிறது. இவற்றில் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்தால் மழையானது மிக கனமழை என்பது அர்த்தம். எனவே, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அந்தந்த மாவட்டங்கள் கண்டிப்பாக எடுக்க வேண்டும் என்பதை வானிலை ஆய்வு மையம் இதன் மூலம் தெரிவித்துள்ளது. மேலும், இதற்காக தமிழக அரசின் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த ஆரஞ்ச் எச்சரிக்கை, நிர்வாகம் ரீதியாகவும், மேலும் நிர்வாகத்தின் மூலம் முன்னசெச்சரிக்கை நடவடிக்கைக்கு கொடுக்கும் ஒரு எச்சரிக்கை ஆகும்.
எந்தெந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: இன்று நவ.3 ஆம் தேதி தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதேப்போல், விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, திருப்பூர்,கோவை, நீலகிரி, ஈரோடு, தூத்துக்குடி, மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
நாளை நவ. 4ஆம் தேதி மழை அலார்ட்: கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், திருப்பூர், ஈரோடு, தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் இன்று (நவ.3) முதல் நவம்பர் 6 வரை பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 400 வீரர்கள் கொண்ட 12 குழுக்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழை.. வானில் வட்டமடித்த 5 விமானங்கள்!